தைப்பூச நாள் விழாவும் அருட்பெருஞ் ஜோதி வழிபாடும்.
இடம்: மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி கிராமம்.
நாள் 17.1.2011 (திங்கள்)
நேரம் : காலை 9.30 மணி.
=-=-=-=-=
மானாமதுரை தாலுகாவில் அமைந்துள்ள மூங்கில் ஊரணி கிராமத்தில் உள்ள வள்ளலார் கோயிலில், 17.1.2011 (திங்கட்கிழமை) அன்று, தைப்பூச நாள் விழா முதல் ஆண்டாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவியார் திருமதி வள்ளி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
காலையில், அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றி, திரு அருட்பா பாடல்களை பாடியபின்னர், அன்னதானம் செய்யப்பட்டது. சுமார் 50 உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Write a comment