சென்னையில் ஆன்மீக விளக்கமளிக்கும் புத்தக கண்காட்சி.
இடம்: திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா யுனிவெர்சிடி பின்புறம்.
நடைபெறும் நாட்கள் : 26.1.2011 (புதன் முதல் 30.1.2011 (ஞாயிறு வரை).
=0=0=0=0=
வரவிருக்கும் 26.1.2011 முதல் 30.1.2011 வரை, ஆன்மீக விளக்கமளிக்கும் புத்தகக் கண்காட்சியினை, சென்னையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ரமணாஸ்வரம் என்ற அமைப்பு நடத்த உள்ளது. ஆன்மீகம் சார்ந்த அமைப்புக்கள், தங்களது பெயர்களை 15.1.2011ந் தேதிக்கு முன்னதாக அவ்வமைப்பினரிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தாங்கள் மேற்கொள்ளும் ஆன்மீகப் பணி / மருத்துவ முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன போன்ற தகவல்களை அவர்களுக்கு முன் கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். ஸ்டால் போடுவதற்கான இடம் மற்றும் 2 நபர்களுக்கு மேற்காணும் புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் உணவு இலவசமாக வழங்கப்படும் என அந் நிறுவனர் தெரிவித்துள்ளனர்.
அங்கு மேற்குறித்த நாட்களில், ஆன்மீகப் புத்தகங்கள், ஆன்மீக விளக்கம் அளிக்கும் ஆடியோ வீடியோ சி.டி-கள், மருந்துகள் ஆயுர்வேதம், யோகா பயிற்சி குறித்த விளக்கம் அளிக்கும் புத்தகங்கள் கொண்டு வந்து விற்பனை செய்யலாம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாய்ப்பினை வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் சன்மார்க்க சங்கங்களும், சன்மார்க்க அன்பர்களும் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
Hindu Spiritual and Service Fair, 2011,
An Exhibition of Spiritual Service Activities
Books of Hindu Service Organisations,
Venue: No. 24, Vasudevan Nagar, S.R.M.C, Thiruvanmiyur Grounds, Chennai
Period: 26.1.2011 to 30.1.2011.
Contact No. 98400 93535.
தொடர்பு செல் எண் : 98410 43430
விரிவான செய்தி, அந் நிறுவனத்திலிருந்து வரப்பெற்றவுடன், இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.