DAEIOU - தயவு
24.10.2010-கோயம்புத்தூரில் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் 19வது ஆண்டு விழா-வள்ளலாரின் 188வது வருவிக்கவுற்ற நாள் விழா.

கோயம்புத்தூர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸில் வள்ளலார் விழா.

கம்பெனியின் 19ஆம் ஆண்டு விழா.

வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற 188வது ஆண்டு விழா.

திண்டுக்கல் சுவாமி தயாநிதி சரவணானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா.

=0=0=0=0=

கடந்த 24.10.2010 (ஞாயிற்றுக் கிழமை) அன்று, கோயம்புத்தூரில் எல்.ஜி.பி.நகர், சரவணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத்தினர், தமது கம்பெனியின் 19ஆம் ஆண்டு விழாவினை முப்பெரும் விழாவாகக் கொண்டாடினர்.

கெளமார மடத்தில் இந் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதுரை, கோயம்புத்தூர் நகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் சன்மார்க்க அன்பர்கள் பெருந்திரளாக இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

முதலில் காலையில் சுமார் 6.00 மணி அளவில், மதுரை அருட்பா ரங்கநாதன் குழுவினர் மூலம், அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் சன்மார்க்க கொடி ஏற்றிவைக்கப்பட்டது. கோயம்புத்தூர் நகரைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் அறிஞர் திரு இருசுப்பிள்ளை அவர்கள், சுத்த சன்மார்க்கக் கொடியினை ஏற்றி வைத்தார்.

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் திரு அருட்பாவிலிருந்து சிற்சக்தி துதியினைப் பாடினர்.

004

004

016

016

005

005

006

006

001

001

002

002

011

011

013

013

022

022

029

029

024

024

033

033