திரு அருட்பா முழுவதற்கும் திரு அவ்வை துரைசாமி பிள்ளை உரைநடை (மறுபதிப்பு)
சென்னை வர்த்தமானன் பதிப்பகம் மூலம் வெளிவரல்.
=0=0=0=0=0=
திரு அருட்பா முழுமையான பாடல்களுக்கும் உரைநடை எழுதி வெளியிட்ட பெருமை அவ்வை திரு துரைசாமி பிள்ளை அவர்களையே சாரும். அவர்கள் எழுதி வெளியிட்ட அவ் உரைநடை நூல்கள் பதிப்பாகி, பல ஆண்டுகளுக்கு முன்னரே விற்றுத் தீர்ந்தன.
தற்போது சென்னை வர்த்தமானன் பதிப்பகத்தினர், அந்த உரை நடை நூல்களை மறுபதிப்பு (Reprint) செய்து வெளியிடுவதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்திருந்தனர்.
அதன்படி, அவ்வுரை நடை நூல்கள் தேவைப்படுவோர், (Advance Booking) முன் கூட்டியே புக்கிங் செய்து வைத்துவிட்டால் டெலிவரியின் போது தொகை அந்தந்த இடங்களில் உள்ள போஸ்டல் துறையில், புத்தகத் தொகையினைச் செலுத்தியவர்களுக்கு, கிடைக்கும்படி அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.
அவ்விதம் அட்வான்ஸ் புக்கிங் செய்தவர்களுக்கெல்லாம், 2010 நவம்பர் மாதத்தில் டெலிவரி செய்யப்படும் என தற்போது அறிவிப்பு செய்துள்ளனர்.
அந்நூலின் இரு பிரதிகள், அன்பர்களுக்கு வேண்டும் என தெரிவித்ததால், அப்பதிப்பகத்தாரிடம் 2 பிரதிகள் அனுப்பி வைக்கும்படி கடந்த செப்டம்பர் மாதம் கோரப்பட்டது.
வர்த்தமானன் பதிப்பகத்திலிருந்து மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவனத்திற்கு வரப்பெற்ற கடித நகல் அன்பர்களின் தகவலுக்காக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கோரிக்கை தெரிவித்தவர்கள், தொகை செலுத்துவதற்குத் தயாராய் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
127
128