DAEIOU - தயவு
வடலூர் சத்திய ஞான சபையைச் சுற்றிய வட எல்லை நிர்ணயம் செய்து காம்பவுண்டுச் சுவர் எழுப்புதல்.

வடலூர் சத்திய ஞான சபை வடக்குப்புக்கம் எல்லை நிர்ணயம் செய்து காம்பவுண்டு சுவர் எழுப்புதல்.

=0=0=0=0=

திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் பெருங்கருணைக்கு ஆட்பட்டு பார்வதிபுரம் மக்கள் சத்திய ஞான சபை கட்டிக் கொள்ள நிலங்களைக் கொடுத்து புண்ணியம் ஈட்டினர். பிற் சந்ததியினர், சத்திய ஞான சபைக்கு வடக்கில் (விருத்தாசலம் செல்லும் மெயின் ரோடு அருகே) கடைகளைக் கட்டி அந்நிலங்களைப் பலகாலமாக ஆக்கிரமித்திருந்தனர். அரசாங்க உத்திரவின் படி பெருமான் காலத்தில் சத்திய ஞான சபையைச் சுற்றிலும் எவ்வளவு இடம் காலியாக வைத்திருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டதோ, அதை அமுல்படுத்தும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக. சத்திய ஞான சபையினைச் சுற்றிலும் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, சபைக்கு வடக்கே (விருத்தாசலம் செல்லும் மெயின் ரோடு அருகே) அமைந்திருந்த கடைகள் சமீபத்தில் அகற்றப்பட்டு, தற்போது காம்பவுண்டுச் சுவர் எழுப்பப் பட்டு வருகின்றது.