நாகர்கோவிலில் 28.8.2010 அன்று 9வது வள்ளலார் ஞான எழுச்சி மாநில மாநாடு நடைபெற்றது.
=0=0=0=0=0=0=
நாகர்கோவிலில் 28.8.2010 அன்று 9வது வள்ளலார் ஞான எழுச்சி மாநில மாநாடு நடைபெற்றது.
கடந்த 28.8.2010 அன்று நாகர்கோவில் வடசேரியில் சிவகாமி அம்மாள் திருமண மண்டபத்தில் வள்ளலார் ஞான எழுச்சி மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பாண்டிச்சேரி மாநிலத்திலும் இருந்து பல்வேறு சுத்த சன்மார்க்க மூத்த அறிஞர் பெருமக்கள் இம்
மாநில மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
திரு அருட்பா இன்னிசைக் கச்சேரியும், பரத நாட்டியமும், சொற்பொழிவுகளும், மிகச் சிறப்புற நடைபெற்றன.
வள்ளலார் விருதினை 13 நபர்களுக்கு இவ்விழாவில் வழங்கினர்.
இவ்விழாவினை சுவாமி பத்மேந்திரா அவர்கள் முன்னின்று நடத்தினார்.
Write a comment