DAEIOU - தயவு
இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்திறப்பு விழா செல்வோர் விபரம்.

இலங்கை வேம்பிராய் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் திறப்புவிழா.

தென் தமிழகத்திலிருந்து இலங்கை செல்வோர் விபரம்

=0=0=0=0=0

வரவிருக்கும் ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இலங்கையில் சத்திய தருமச்சாலை மற்றும் அதனைத் தொடர்ந்து சத்திய ஞான கோட்டம்

ஆகியவற்றைத் திறப்பு விழாச் செய்ய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை அளவெட்டியைச் சேர்ந்த திரு கேத்தீஸ்வரன் மற்றும் இலங்கை

சாவகச்சேரியைச் சேர்ந்த அவரது மனைவியார் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்கு தென் தமிழகத்தைச் சேர்ந்த கீழ்க்கண்ட அன்பர்கள் விருப்பம் தெரிவித்து அவர்களது பயணம்

ஆகஸ்ட் 16 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் செல்ல உள்ளனர்.

1. திரு செளந்திரராஜன், திண்டுக்கல். 2. திரு விஸ்வநாதன், திண்டுக்கல், 3. திரு பாலுசாமி, ஐராவத நல்லூர், மதுரை 4. திரு கண்ணப்பன்,

சம்மாட்டிபுரம், மதுரை, 5. (அவரது மனைவியார்) திருமதி மீனாம்பிகை, சம்மாட்டிபுரம், மதுரை. 6. திரு எஸ். தில்லைநாதன், கடலூர் O.T 7. மழையூர் திரு

சதாசிவம், (திரு அருட்பா இசைப் பாடகர்), 8. நாராயணபுரம் திரு ஏ. ராமானுஜம்.மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்.

இன்னும் பல இடங்களிலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள், பெருவாரியாகக் கலந்து கொண்டு, இவ்விழாவினைச் சிறப்பிக்க உள்ளனர். இந்த அருளியல் காரியம் தங்கு தடையின்றி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் பேராற்றலோடும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் ஆசிகளோடும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் ஆசிகளோடும் நடைபெற அனைத்து அன்பர்களும், வேண்டிக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.


இங்ஙனம்

வள்ளல் அடிமை

தயாநேயன் கனகசபாபதி கேத்தீஸ்வரன்

அவரது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி

அவர்களது மகன் தயானந்தன்