DAEIOU - தயவு
25.7.2010 மதுரையில் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா.

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களுக்கு நூற்றாண்டு விழா

மதுரை ஸ்ரீ மந் நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம்

மேல் கரை, மதுரை.

நாள் 25.7.2010

நேரம் காலை 9.00 மணி

=================================================

இன்று காலை (25.7.2010) மதுரை தெப்பக்குளத்துக்கு மேற்கில் அமைந்துள்ள ஸ்ரீ மந் நடன கோபால நாயகி மந்திரில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களது நூற்றாண்டு விழா மிகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது.

காலை 9.00 மணிக்கு திரு அருட்பா ரங்கநாதன் அவர்களாலும் திரு ஹரி கோவிந்தன் அவர்களால் திருஅருட்பா பாடல்களும், நாராயணபுரம் திரு ராமானுஜம் அவர்களால் திண்டுக்கல் சரவணானந்தா அவர்கள் இயற்றிய தயவுப்பாடல்களும் பாடப்பட்டன.

பின்னர், திரு T.R. சந்திரசேகர் அவர்கள், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் சன்மார்க்கத் தொண்டு, அவர் திரு அருட்பாக்களுக்கு எழுதிய உரைகள் முதலானவை பற்றிப் பேசினார். வள்ளலார் நெறியில், திண்டுக்கல் சபாபதி சுவாமிகளிடம் பயிற்சி பெற்று, சுவாமி சரவணானந்தா அவர்கள், திரு அருட்பிரகாசரின் காட்சி கிடைத்ததைச் சொல்லி, அருட்பெருஞ் ஜோதி மகா மந்திரத்தின் சாரமே தயவு என சுவாமிகளுக்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் எடுத்துக் கொடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்

அவரை அடுத்து திருமதி எஸ்.பி. கீதா பாரதி எம். ஏ,அவர்கள், சத்திய ஞான சபை என்ற தலைப்பில், வள்ளற் பெருமான் சொல்லியபடி சபை எனதுளமெனத் தானமர்ந்தெனக்கே அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி எனக்கூறினார். புறத்தே வள்ளற் பெருமான் வடலூரில் சத்திய ஞான சபையினை அன்பர்களின் புற வழிபாட்டுக்கு அமைத்து, அனைவரும் இதனைக் கண்டு அக வழிபாட்டு முறைக்கு வர வேண்டும் என அவர் உரை ஆற்றினார்.

அடுத்ததாகப் பேசிய சிறப்புப் பேச்சாளர் திரு தா.கு.சுப்ரமண்யம், ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர், பல்வேறு பட்டிமன்றங்களில் பங்கேற்றவர், பின்னர் பட்டி மன்ற நடுவராகவும் பணியாற்றியவர், நால்வகை ஒழுக்கம் என்பது பற்றிப் பேசினார். வள்ளலார் வகுத்த நெறியில் பயிலுவோர், இந்த 4 வகை ஒழுக்க நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றினால், அதன் அடைவு மரணமில்லாப் பெருவாழ்வு கிடைக்கும் என்பதாகும் என்றார். திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், தயவு மயமாகவே ஆகிவிட்ட