மேட்டுக்குப்பத்தில் வேலூர் மாவட்டம் ராஜமன்னார்கோவிலைச் சேர்ந்த திரு நாராயணன் சார்பில் கட்டப்பட்டுவரும்
திரு அருட்பா மண்டபம்.
=0=0=0=0=0=0=0
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் சித்தி அடைந்த மேட்டுக் குப்பம், பல சிறப்புக்களைப் பெற்று வருகின்றது.
சித்தி வளாகத் திருமாளிகையின் முன்னர், சிதிலமாகக் கிடந்த மண்டபத்தின் கட்டுமான வேலைகள் மிகத் துரிதமாக
நடைபெற்று வருகின்றன. வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள், திரு அருட்பாக்கள் முதலியனவற்றைத்
தாங்கி நிற்கும் இந்த அருட்பா மண்டபம், பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது. காலங்களுக்கெல்லாம்
கடந்து வள்ளற் பெருமானின் அருட் பெரு நெறிகளை பறைசாற்றும் விதத்தில் இதன் வாசகங்கள்
அமைந்துள்ளன.
Write a comment