திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூரில் சன்மார்க்க குருகுலத்தில் நடைபெற்ற திரு அருட்பா திருமுறை மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
திரு அருட்பா திருமுறை மாநாடு இறுதி நாளன்று கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக திரு நந்தி சரவணன், நிறுவனர், தீஞ்சுவை நீரோடை
தருமச்சாலை அவர்கள் தெரிவித்த தகவல்.
1. திரு அருட்பாவினை, ஆரம்பக் கல்வியிலிருந்து கல்லூரி வரை, பாடத்திட்டத்தில் சேர்த்து அனைவரும் பயன்பெறச் செய்ய வேண்டும்
.2. சத்திய தருமச் சாலையில் எந்நேரமானாலும் அன்பர்கள் வந்து உணவருந்தத் தக்க வகையில் உணவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. கீரனூரில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக, திரு குலபதி குப்புசாமி ஐயா அவர்கள், சன்மார்க்க குருகுலம் நடத்தி, சமுதாயத் தொண்டினைச்
சிறப்புறச் செய்து வருகின்றார். அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்க வேண்டும்.
4. சத்திய தருமச் சாலையில் விறகு வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் மாட்டினை விற்கக் கூடாது. அது இறந்தால் புதைக்க வேண்டும்.