DAEIOU - தயவு
25.5.2010 மதுரை கே.புதூரில் தருமச் சாலை துவக்க விழா.

மதுரை கே.புதூரில் தருமச் சாலை துவக்க விழா.

இடம் : ராம வர்மா நகர் 7வது தெரு.

மதுரை கே. புதூர் ராம வர்மா நகர் 7வது தெருவில் வசிக்கும் திரு தருமலிங்கம் என்ற சன்மார்க்க அன்பர், முதுகுளத்தூரில் வசித்து வருகின்றார்.

அங்கு சன்மார்க்க சங்கம் நடத்திய பின் குடும்ப சூழ்நிலை காரணமாக, மதுரை கே.புதூரில் குடியமர்ந்தார்.

கே.புதூர் மாதா கோவில் அருகே இவர், வாரந்தோறும், அன்னதானம் செய்து வருகின்றார்.



தான் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியில் மேலே கட்டிடம் எழுப்பி, இன்று 25.5.2010 அன்று தருமச் சாலை துவக்க விழா நடத்தினார். மதுரையைச் சார்ந்த அன்பர்கள்

பெருவாரியாக இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிலையூர் திரு விஜயராமன் சிறப்புரை ஆற்றினார்.

புதுக்கோட்டை அருட்பா அவதானி திரு ஜெகநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றி, சுத்த சன்மார்க்கம் மற்றும் திரு அருட்பா முதலானவற்றில், அன்பர்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்தார்.

மதுரை நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் ட்ரஸ்டி, ஏ.ராமானுஜம் கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க உரை ஆற்றினார். இலங்கையில்

கட்டப்பட்டு துவக்க விழா காண உள்ள சத்திய ஞானக் கோட்டம் குறித்த தகவல்களை அவர் விவரித்தார்.

அனைவருக்கும் அன்னமளிப்பு நடைபெற்றபின் மாலை 4.00 மணி அளவில், விழா நிறைவுற்றது.