
கோயம்புத்தூர் மாவட்டம்-பொள்ளாச்சி வட்டம்-வடசித்தூர் கிராமத்தில் சத்திய தருமச்சாலை திறப்பு விழா.
நாள் 2.4.2010 (வெள்ளிக்கிழமை) நேரம் காலை 6.00 மணி.
கோயம்புத்தூர் மாவட்டம் வடசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு சிவக்குமார் என்ற அன்பர் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
தற்போது சிங்கப்பூரில் அவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்.
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜக்ட் அவரால் மிகுந்த சிரத்தையுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அவரது தகப்பனார் திரு எல். ஆறுமுகம், அவரது குடும்பத்தினர் மற்றும் பெரியப்பா ஆகியவர்களும், சுத்த சன்மார்க்க நெறியில் நிற்பவர்கள்.
அவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில், ஒரு சத்திய தருமச் சாலை, மற்றும் சாதுக்கள் மையம் சுத்த சன்மார்க்க பயிற்சி நிலையம், சுத்த சன்மார்க்கம் பயில நூலகம் முதலானவை கொண்ட ஒரு அமைப்பினை அமைக்க அவர் ஏற்பாடு செய்து வருகின்றார்.
வடசித்தூர் கிராமத்தில், 2.4.2010 (வெள்ளிக் கிழமை அன்று), காலை 6.00 மணி அளவில், திரு அருட்பா-அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. பழனி தாலுகா கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளலார் குருகுல நிறுவனர் தலைமையில் அருட்பா பாராயணம் துவங்கியது.
திருவண்ணாமலை திரு பாபு சாதுவின் நிறுவனத்திலிருந்து சன்மார்க்க சாதகர்கள் 11 நபர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து பெரும்பங்காற்றினர்.
காலை 10.45 மணி அகவல் பாராயணம் மற்றும் திரு அருட்பாக்கள் பாடுதல் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அது முடிவுற்றபின் காலை உணவளிக்கப்பட்டது.
அதன் பின்னர் குலபதி குப்புச்சாமி அவர்கள், அனைவருக்கும் சன்மார்க்கப் பேருரை ஆற்றினார். தமது நிறுவனமான வள்ளலார் குருகுலம் வளர, தாம், வாழ்வில் என்னென்ன கஷ்டங்களைச் சந்தித்தார் என்பதை விளக்கி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கருணையினாலே, எந்த விதமான சிரமமுன்றி, அந்தக் குருகுலம் தழைத்தோங்கி வருகின்றது என அவர் தெரிவித்தார்.தமக்கு இள வயதில். திரு அருட்பாவின் துணை கிடைத்ததால்தான், வாழ்க்கையில், இவ்விதம் முன்னேறி, திக்கற்றோருக்கு உதவி செய்யும் நிலை வாய்த்தது என்றார். மாதா, பிதா, குரு தெய்வம் அனைவரையும் அனைவரும் வழிபாடு செய்து தமது வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
அதன் பின்னர். திரு சேலம் குப்புசாமி ஐயா அவர்கள், சன்மார்க்கப் பேருரை நிகழ்த்தினார்.வள்ளற் பெருமான் போதித்த சுத்த சன்மார்க்க நெறியினை அனைவரும் வாழ்வில் கடைப்பிடித்தால், அவர் அடைந்த திரிதேக சித்திப் பெருவாழ்வினை அடையலாம் என்றார்.
அனைவரும், தத்தமது வாழ்வில் தாமதமின்றி, முயலவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
திரு அருட்பா-மகாதேவ மாலை பாடல்கள் மற்றும் சேலம் திரு குப்புசாமி அவர்கள் அதற்கு ஆற்றிய உரை அடங்கிய ஆடியோ சி.டி.இவ்விழாவில்
வெளியிடப்பட்டது.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடித்ததால் தம் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை பங்கேற்றவர்கள் விவரித்தனர். (3வது படத்தில் உள்ளவர்
செல்வி மரியா, அமெரிக்கா.)
சேலம் திரு குப்புசாமி ஐயாவும் பழனி குலபதி திரு குப்புசாமி ஐயாவும். செல்வி மரியா (USA) திரு அருட்பா பாடுகின்றார்.
வடசித்தூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சாதுக்கள் மையத்தின் முன்பாக கட்டுமானப் பணிகளைப் பார்வையிடும் திரு சிவகுமார், சிங்கப்பூர்