DAEIOU - தயவு
28.4.2010 (புதன்) கோயம்புத்தூரில் சித்ரா பெளர்ணமி நாளன்று திரு அருட்பா இசைக் கச்சேரி.

கோயம்புத்தூரில் சித்ரா பெளர்ணமி நாளன்று திரு அருட்பா இசைக் கச்சேரி.

நாள் 28.4.2010 (புதன் கிழமை)

நடத்துபவர் திருபுவனம் ஆத்மநாதன் குழுவினர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், வடசித்தூர் கிராமத்தின் அருகே தருமச்சாலை மற்றும் சாதுக்கள் தங்கும் மையம் ஆகியவை, சிங்கப்பூர் சிவகுமார் அவர்களால் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 2.4.2010 அன்று இதற்கான துவக்க விழா நடைபெற்றது.

அதனை அடுத்து வரும் 28.4.2010 புதன்கிழமை சித்திரா பெளர்ணமி நாளன்று கோயம்புத்தூரில், திருபுவனம் திரு ஆத்மநாதன் அவர்கள் தலைமையில், பல்வேறு இசைக் கலைஞர்களைக் கொண்டு,திரு அருட்பா இசை விழா நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அது குறித்த விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும்.

சன்மார்க்க சங்கத்தினரும், சன்மார்க்க அன்பர்களும், நடைபெற இருக்கும் இந்த இசை விழா குறித்து அனைவருக்கும் தெரிவிக்கும்;படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.