DAEIOU - தயவு
13.3.2010 (சனி) மற்றும் 14.3.2010 (ஞாயிறு)-மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில் மருத்துவ முகாம் நடைபெறல் குறித்த அறிவிப்பு

வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.14.

Reg. 251 BK4/2008



மருத்துவ முகாம்.



அகத்தியர் பரம்பரை தொடுவர்ம கலை நிபுணர் மருத்துவர் திரு சாதுபாண்டுரங்கம், R.M.P.

அகரம் உயிர் நீட்டும் ஆய்வகம், எல்.ஐ.சி. நகர், மூலப்பாளையம் (அஞ்சல்), ஈரோடு.







வரும் மார்ச் மாதம் 13.3.2010 (சனிக்கிழமை) மற்றும் 14.3.2010 (ஞாயிறு) ஆகிய இரு தினங்களில், மதுரை நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில், மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.







ஈரோட்டைச் சேர்ந்த சன்மார்க்க சாது திரு பாண்டுரங்கம், R.M.P, தமது மருத்துவக் குழுவினருடன் வருகை தந்து கீழ்க்காணும் நோய்க்கு மருத்துவ வசதி செய்து தர உள்ளார்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-00-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

மூட்டு வலி. இடுப்பு வலி, கழுத்து வலி, தலைவலி, கை கால் பிடிப்பு, தீச்சுட்ட புண், வெட்டுக் காயம், பாத எரிச்சல், குதிகால் வலி யாவையும் குணப்படுத்துதல்.

கண் கருவளையம், மங்கு, கரும்புள்ளி குணப்படுத்துதல், முகம் சிவப்பு அழகாக்கி அழகு தரச் செய்தல்.

தலைவலி, மண்டை குத்தல் ஆகியவற்றைக் குணப்படுத்துதல்.

உடல் சூட்டைத் தணிக்கும், பொடுகு, பேன் தொல்லை இராமல் முடி உதிர்வதை தீர்க்கவும் மருந்து தரப்படும்.

சளி, இருமல், நெஞ்சு கரிப்பு, சைனஸ், நெஞ்சு சளி குணமாவதற்கு மருந்து தரப்படும்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-00-0-0-0-0-0-0-00-0-0-0-0-0-0-0-0-0-00-0-0-0-0-0-0-0-

கடந்த 21.2.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற வாராந்திரச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு, வந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் இவ்விவரம் தெரிவிக்கப்பட்டது.







தத்தமது பகுதிகளில் உள்ள நோய் பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து வந்து இம் மருத்துவ முகாமில் பயன்பெறும்படி அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.







இங்ஙனம்,

மேனேஜிங் ட்ரஸ்டி,

வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்,

நாராயணபுரம், மதுரை.14

இந் நிறுவனம், மதுரையில் நத்தம் செல்லும் ரோடில் நாராயணபுரம் ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள தண்டல் முத்துக் கோனார் தெருவில், டோர் நி. 2/244-1ல் செயல்பட்டு வருகின்றது.



பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ரூட் எண்.23 சம்பந்தப்பட்ட எல்லா நகரப் பேருந்துகளும் இவ்வழியே செல்கின்றன.



மாட்டுத் தாவணியிலிருந்து நத்தம் செல்லும் பஸ்கள் மூலம் பேங்க் காலனியில் இறங்கி, நாகனாகுளம் பஞ்சாயது ஆபீஸ் அருகே அமைந்துள்ள தண்டல் முத்துக் கோனார் தெருவில் இயங்கி வரும் இந் நிறுவனத்திற்கு வரலாம்.

==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

மருத்துவர் போன் எண் 0424 - 2280549.

செல் : 91 94437 40865, 91 98425 25754.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

மேனேஜிங் ட்ரஸ்டி-தொடர்பு எண்: 91 97898 72120.