வள்ளலார் சன்மார்க்க சங்கங்களைக் குறி வைத்து நடக்கும் ஏமாற்று வேலைகள்-1
Ramanujam
posted 23 months ago
04 Mar 2010 04:38:22 GMT 4:38:22 AM
907 views
வள்ளலார் சன்மார்க்க சங்கங்களைக் குறி வைத்து நடக்கும் ஏமாற்று வேலைகள்-1
-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
வள்ளலார் சன்மார்க்க சங்கங்கள் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.
சங்கமே இல்லாத ஒரு இடத்திலிருந்து (மாத்தூர்), மாவட்டத்தின் வேறொரு (வாடிப்பட்டி) தாலுகாவில் உள்ள முக்கியஸ்தர்களிடம் சுமார் ஐந்தாறு பேர் சென்று மாத்தூரில் நாங்கள் சன்மார்க்க சங்கம் நடத்துகின்றோம்..அங்கு நடக்கும் அன்னதானப் பணிகளுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். என்று கேட்டு, வற்புறுத்தி, ஆயிரக்கணக்கில் தொகையையும் பெற்றுவிட்டனர்.
சில நாட்களுக்குப் பின்னர், பணம் கொடுத்த (வாடிப்பட்டி அருகில் உள்ள) ஊர்க்காரர், நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனுக்கு போன் செய்து, நடந்த விவரங்களைத் தெரிவித்து, அந்தப் பணம் உரிய முறையில் செலவிடப்பட வில்லை என தாங்கள், அந்த மாத்தூருக்கே சென்று தெரிந்து .கொண்டதாகக் கூறினர், வாங்கிய பணத்தில் ஒரு பகுதியை, மாத்தூரில் இயங்கி வரும் பள்ளிக் கூடத்தில் பயிலும் மாணாக்கர்களுக்கு மதிய உணவு வழங்கி விட்டு மீதியைச் செலவு செய்யாமல், வடலூருக்குச் சென்று நாங்கள் மீதித் தொகையை அன்னதானம் வழங்குவதற்கு செலவிட இருப்பதாக அந்தப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளதாக தமது விசாரணையில் அவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.
இதில் முக்கியமான செய்தி என்னவெனில், மாத்தூரில், ஒரு சன்மார்க்க சங்கமே இயங்கவில்லை என்பதுதான்.
தவறான தகவலைத் தெரிவித்து, பணம் வசூல் செய்வதற்கு இவ்விதமாக சில நபர்கள் கிளம்பியுள்ளனர் என்பதே இந்தச் செய்தியிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதே போன்ற தகவலைத் தெரிவித்து, எத்தனை இடங்களில் அவர்கள் வசூல் செய்தனரோ யாருக்கும் தெரியாது. எனவே, சன்மார்க்க சங்க அன்பர்கள், இது போன்ற விஷயங்களில்,மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தச் செய்தி வெளியிடப்படுகின்றது.