பாராட்டுக்குப் பாராட்டு அனுப்பும் மாண்பின் சிறப்பு.
Ramanujam
posted 23 months ago
02 Mar 2010 08:51:52 GMT 8:51:52 AM
1201 views
பாராட்டுக்குப் பாராட்டு.
மியான்மரில் உள்ள யாங்கோன் நகரில் சுத்த சன்மார்க்க சங்கம், கடந்த 1951ஆம் ஆண்டு முதல், சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பியும், அதற்கும் மேலாக, ஒரு பள்ளியினையும் திறம்பட நடத்தி வருகின்றது.
இந்த 2010ஆம் ஆண்டு தைப்பூச விழா நடைபெறுதல் குறித்து அந்த சங்கத்தின் அன்பர்கள் தகவல் அனுப்பியதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதால் அவர்கள், பாராட்டுக்குப் பாராட்டு அனுப்பி உள்ளனர்.
அவர்களது உயர்ந்த உள்ளமும், பலகாலமாக திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை மலேசியாவில் பரப்பி வருவதற்கும், சன்மார்க்க உலகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது. அவர்கள் அனுப்பிய பாராட்டு கீழே அன்பர்களின் தகவலுக்காகத் தரப்பட்டுள்ளது.