28.2.2010 திண்டுக்கல் பொன்னகரத்தில் அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயத்தில் நடைபெற்ற மாதப் பூச நாள் விழா.
Ramanujam
posted 23 months ago
01 Mar 2010 07:15:48 GMT 7:15:48 AM
837 views
28.2.2010 திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ் ஜோதி தயவு ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாதப் பூச விழா நிகழ்ச்சி தொகுப்பு.
28.2.2010 ஞாயிற்றுக் கிழமை, காலை 10.00 மணி அளவில் திரு ராமலிங்கம் மற்றும் வருகை புரிந்திருந்த அனைத்து அன்பர்களும், சுத்த சன்மார்க்கக் கொடியின் முன்பு நின்று வணங்கி, திரு அருட்பாவில் உள்ள “கொடி வணக்கத்தை” பாடித் துதித்தனர்.

பின்னர், திரு அருணகிரி அவர்கள் தலைமையில் திருவடிப் புகழ்ச்சி, அருட்பெருஞ் ஜோதி அகவல், அட்டகம் ஆகியவை கூட்டு பாராயணமாகப் பாடப்பட்டன.

முடிவுற்றதும், சின்னாளப்பட்டி அன்பர் தயவடிமை திரு பி. செல்வராஜன் அவர்கள் எழுதிய திண்டுக்கல் ஞான மகான் தயாநிதி சரவணானந்தா சுவாமிகளின் சுத்த சன்மார்க்க உபதேச உண்மைகள் (இரண்டாம் பாகம்) என்ற நூல் வெளியிடப்பட்டது.

இதன் முதற் பாகம், “ஆன்மாவின் உண்மை விளக்கம்” என்ற தலைப்பிடப்பட்டு, வடலூர்ப் பெருவெளியில், தைப்பூச

நன்னாளில் வெளியிடப்பட்டது.
மேலும், தயாநிதி சரவணானந்த சுவாமிகள் திரு அருட்பிரகாச வள்ளலார் தோற்றத்தின் 148-வது வெள்ளணி விழா நாளான 02.10.1970 அன்று நினைவு மலராக மலர்ந்ததை, கடந்த 30.1.2010 தைப்பூச நாளன்று, வடலூரில் ராமநாதபுரம் சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் வெளியிட்டதைக் குறித்தும், அந்த நூலின் சாராம்சத்தையும் திரு பி. செல்வராஜன் அவர்கள் விவரித்தார். முன் இரண்டரை நிலை 1 முதல் 4 தலைப்பாகவும்., பின் இரண்டரை நிலை 6 முதல் 9 தலைப்பாகவும் வெளியிடப்பட்டு, நடுவில் உள்ள 5வது தலைப்பு, வள்ளல் அனுபவம் என்று குறிப்பிட்டிருப்பதை சிலாகித்து, விவரித்தார். சுத்த சன்மார்க்க அனுபவம் அக நிலையிலிருந்து அனுபவிக்க வேண்டியது. தயாநிதி சுவாமிகள் இதனையே தமது நூல்களிலும், தம்மைக் காண வரும் சன்மார்க்க அன்பர்களிடத்தும், தாம் செல்லுமிடங்களில் உரை நிகழ்த்துவதிலும், வலியுறுத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். இந்த நூல், ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாங்கிப் படித்துப் பயன்பெறத் தக்க ஒரு நூலாகும் என அவர் தெரிவித்தார். எங்கு சென்றாலும், இந்த நூலினைக் கையில் கொண்டு சென்று, அடிக்கடி படித்து பயன்பெறும்படி அவர், அன்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
திண்டுக்கல் சுவாமி அவர்களின் நூல்கள் வெளியானதும், திண்டுக்கல் சன்மார்க்க அன்பர் திரு சுபம். சிவராமன் அவர்கள், அவற்றில் 100 புத்தகங்களை வாங்கி, தமக்குத் தெரிந்த அன்பர்களுக்கு படித்துப் பயன்பெறத் தக்க விதத்தில் இலவசமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல், இந்த முறையும், அருட்பெருஞ் ஜோதி சன்மார்க்கம் என்ற நூலில் 100 பிரதிகளை, அவர் பெற்றுச் சென்றது ஒரு சிறப்பு.
திண்டுக்கல் கியாரண்டி ஜூவல்லர்ஸ் நிறுவனர் திரு இராமலிங்கம் அவர்கள், 2010ஆம் ஆண்டிற்கான காலண்டரையும் சிறிய நாட்குறிப்புப் புத்தகத்தையும், அன்பர்களனைவருக்கும் வழங்கினார். அந்த காலண்டரில், முன் பக்கத்தில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் படமும், பின் பக்கத்தில் அனைத்து சன்மார்க்க அன்பர்களும் படித்துப் பயன் பெறும் விதத்தில். வள்ளற் பெருமான் அருளிய மனுமுறை கண்ட வாசகமும் இடம் பெற்றிருந்தது. அதனைப் பெற்ற சன்மார்க்க .
அன்பர்கள் அனைவரும் அக மிக மகிழ்ந்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அன்பர் திரு இராமலிங்கம் அவர்கள், பேருபதேசம் வாசித்து அன்பர்களுக்கு விளக்கமளித்தார்.
தயாநிதி அவர்கள் 1938ஆம் ஆண்டு வெளியிட்ட “சத்திய ஞான சபைத் தத்துவ விளக்கம்” என்ற நூலினை படக் காட்சி அமைப்புடன் (DVD) திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையின் சார்பில் கடந்த தைப்பூச நன்னாளில், வடலூரில், வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியினை, ஸ்விட்சர்லாந்தில் பணிபுரியும் ஸ்ரீ லங்காவின் சாகசக் சேரியினைச் சேர்ந்த சன்மார்க்க அன்பரும், அங்கு சத்திய ஞான கோட்டம் கட்டி வருபவருமான திரு கேத்தீஸ்வரன் அவர்களுக்கு சுவாமிகளின் திண்டுக்கல் சத்திய ஞான கோட்டத்தில் 27.1.2010 அன்று வழங்கப்பட்டது.
பின்னர் மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி பேசினார். அவர், சின்னாளப்பட்டி தயவடிமை திரு பி. செல்வராஜன் அவர்கள், சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்து, தயாநிதி சுவாமிகளிடம் ஆசி பெற்று வெளியிட்ட நூல்கள் மிக பயன் உள்ளவை, அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டும் என்றார்.
சத்திய ஞான சபை தத்துவ விளக்கம் பற்றி சுவாமிகளின் புத்தகத்தில் உள்ள செய்திகள் DVD மூலமாக 72 ஆண்டுகள் கடந்து, வடற் பெரு வெளியில் வெளியிடப்பட்டதை அவர் அனைவருக்கும் தெரிவித்து, சத்திய ஞான சபை ஏன் தென் முகம் கொண்டு விளங்குகின்றது, ஜீவர்கள், ஜீவ தயை புரிந்து, வள்ளற் பெருமான் நிர்ணயித்த இரும்புச் சங்கிலி, வேல் கம்பிச் சுற்றாலை, அரைவட்ட கைப்பிடிச் சுவர் ஆகியவை அனைத்தையும் தாண்டி, அருட்பெருஞ் ஜோதி அகண்ட தீபம் விளங்கும் தாய்ச் சுவரை அடைவதற்கு, உண்டான தகுதியினை எடுத்துரைத்தார். அதற்கு முன்னர், நிருத்த சித்தி விநாயக பீடத்தை அடைந்து பிங்கலை சுவாசத்தை எழுப்பிக் கொண்டு, எழுவார் மேடையை அடைந்து, காண வேண்டிய காட்சிகளை எல்லாம் அவர், சுவாமிகள் புத்தகத்தில் தெரிவித்ததே போன்று அனைவருக்கும் எடுத்துரைத்தார். சத்திய ஞான சபை எண்கோணச் சுவர்கள், எண்பது காணி நிலத்தின் நடுவே அமைக்கப்பெற்ற விதம் அனைத்தையும் அன்பர்களுக்கு அவர், சுவாமிகளின் எழுதிய நூலின் அடிப்படையில் தெரிவித்தார். இந்த ஒலி, ஒளிக் காட்சிகள் அடங்கிய DVD யை அனைவரும் வாங்கி, சத்திய ஞான சபையில் உண்மை வழிபாட்டு முறையினைத் தெரிந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இதன் அடிப்படையில், கோயம்புத்தூர் அன்பர்கள் திரு ராம்தாஸ், ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் மற்றும் திரு சிவக்குமார், திரு பிரபாகரன் ஆகியோர் இணைந்து தயார் செய்து வெளியிட்ட பட விளக்கம் அடங்கிய 2010ஆம் ஆண்டு காலண்டரையும் அவர் அன்பர்கள் அனைவருக்கும் காண்பித்தார். ஆறு கால பூஜை செய்து அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளுக்கு அனைவரும் பாத்திரர்களாக வேண்டும் என அதில் விவரிக்கப்பட்டதையும் அவர் தெரிவித்தார். இந்த காலண்டரும், 2010 தைப்பூச நாளில், வடற்பெரு வெளியில் வெளியிடப்பட்டதையும் அவர் மேலும் கூறினார்.
அடுத்தபடியாக, ஸ்ரீ லங்கா (இலங்கை) சாவகச்சேரி அருகே உள்ள வேம்பிராயில் அன்பர் திரு கேத்தீஸ்வரன், மற்றும் அவரது துணைவியார் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கட்டியுள்ள சத்திய ஞான கோட்டம் வரும் 2010 ஆவணி மாதம் திறக்கப்பட உள்ளது குறித்தும், அவர் கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.
இலங்கையில், சத்திய தருமச் சாலையும், சத்திய ஞான கோட்டமும் திறப்பு விழா குறித்த விபரம்.
நடைபெறும் நாள் …. 2010ஆம் ஆண்டு ஆவனி மாதப் பூச நாள்.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தை அடுத்த சாவகச்சேரியில் உள்ள வேம்பிராய் கிராமத்தில் சத்திய தருமச் சாலை திறப்பு விழாவும், பின்னர் 2010ம் ஆண்டு, ஆவணி மாதப் பூச நாளில், சத்திய ஞான கோட்டமும் திறக்கப்பட்டு அருட்பெருஞ்ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது.
அது குறித்த விரிவான நிகழ்ச்சி நிரல் (detailed programme) பின்னர் வெளியிடப்பட உள்ளது.
அதற்கு முன்னர், எந்தெந்த தேதிகளில் இது குறித்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை திரு கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவ்விவரம், அன்பர்களின் தகவலுக்காகக் கீழே தரப்பட்டுள்ளது.
29.6.2010 செவ்வாய் |
வடலூரில் ராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் இலங்கை சாவகச் சேரிக்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடியின் முன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) திரு அருட்பா முற்றோதல் நடைபெற உள்ளது. |
15.8.2010 ஞாயிறு |
திரு நிலைக் கண்ணாடி வழிபாடு நிறைவுபெறல். |
16.8.2010 திங்கள் |
திரு நிலைக் கண்ணாடியுடன், மருதூர், கருங்குழி, தீஞ்சுவை நீரோடை, மேட்டுக்குப்பம், வடலூர் சத்திய தருமச் சாலை, வடலூர் சத்திய ஞான சபை ஆகியவற்றில் வழிபாடு செய்து சுற்றி வரல் |
17.8.2010 செவ்வாய் |
திருச்சியிலிருந்து விமானம் மூலம் திருநிலைக் கண்ணாடியுடன் கொழும்பு வந்தடைதல். திரிகோணமலை சென்று பின்னர் திருக்கோணேஸ்வரத்தில் வழிபாடு செய்தல் |
18.8.2010 புதன் |
மன்னார் சென்று திருக்கேத்தீஸ்வரத்தில் வழிபாடு செய்தல். இரவு – சாவகச்சேரி வந்தடைதல் |
19.8.2010 வியாழன் |
ஜீவ காருண்யம், உயிரிரக்கம் பற்றி 3 இடங்களில் ஊர்வலம் நடத்துதல். யாழ்ப்பாணம்-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் துவங்குதல்..உயிரிரக்கத்தை வலியுறுத்தி இவ்வூர்வலம் நடைபெறும். இந்து சமயப் பேரவையில் துவங்கி, சிவதொண்டன் நிலையத்தில் நிறைவடைதல். |
20.8.2010 வெள்ளி |
அளவெட்டி-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் கேணிக்கரை-வைரவர் கோயிலில் ஆரம்பித்து கும்பிளாவளை பிள்ளையார் கோவிலில் நிறைவடைதல். இரவு – செல்வச் சன்னிதி அடைந்து திரு அருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தல். |
21.8.2010 சனி |
சாவகச்சேரி..- ஊர்வலம் சிவன் கோவிலில் ஆரம்பித்து வேம்பிராய் பூத விராயர் கோயிலில் நிறைவடைதல். |
22.8.2010 ஞாயிறு |
வேம்பிராய்- காலை – குருவணக்கம். எல்லாம் வல்ல அருட்தந்தை ராமலிங்கப் பெருமானை சிங்காதனத்தில் வைத்து..வணங்குதல். திரு அருட்பா பாராயணம் மற்றும் வழிபாடு செய்தல் |
23.8.2010 திங்கள் |
வேம்பிராய்-சத்திய தர்மச்சாலை திறப்பு விழா. |
24.8.2010 செவ்வாய் |
சத்திய ஞான கோட்டத்தின் திருக்கதவம் திறப்பு விழா திறந்த பின் ஜோதி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலவறை வழிபாடு..நாள் ஒன்றுக்கு 6 முறை என்ற வீதத்தில் 8 நாட்கள் வழிபாடு 48 முறை நடைபெறல். |
31.8.2010 செவ்வாய் |
நிலவறை வழிபாடு நிறைவு செய்தல் இரவு 8 மணிக்கு-யந்திரப் பிரதிஷ்டை செய்தல் |
1.9.2010 புதன் |
காலை 5.00 மணிக்கு திருநிலைக் கண்ணாடி வழிபாடு செய்து ஜோதி பீடத்தில் பொருத்துதல். பகல் 12 மணிக்கு ஜோதி பீடம், சிற்சபை, பொற்சபை ஆகியவற்றிற்கு நீராட்டி முடிவைத்தல். |
2.9.2010 வியாழன் முதல் 5.9.2010 ஞாயிறு வரை |
சத்திய ஞான கோட்டத்தில் உள்ளேயிருந்து வழிபாடு செய்தல். திரு அருட்பா பாராயணம் செய்தல். |
6.9.2010 திங்கள் |
அதிகாலை 2.00 மணிக்கு-விண்ணப்பங்கள் செலுத்துதல். காலை 5.00 மணி அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றுதல் காலை 6.00 மணி – ஜோதி வழிபாடு துவக்கம். 7 திரைகளை நீக்கி ஜாதி மத வேறுபாடின்றி ஜோதி தரிசனம் காண்பித்தல். காலை 10 மணி மதியம் 1 மணி மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணிக்கு-வடலூரில் சத்திய ஞான சபையில் திரை நீக்கி 6 முறை அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காண்பிப்பது போன்று காண்பித்தல். ஒரு புறம் ஜோதி தரிசனம் காண்பித்தல் மறு புறம் விசேட நிகழ்ச்சிகள்… சொற்பொழிவு..வள்ளலார் வரலாற்று நாடகம் திரு அருட்பா நடனம் மழையூர் சதாசிவம் திரு அருட்பா இசைக் கச்சேரி..முதலானவை மறுநாள் (7.9.2010) காலை 6.00 மணி வரை நடைபெறும் |
7.9.2010 செவ்வாய் |
காலை 6.00 மணி- ஜோதி தரிசனம் காண்பித்தல். மதியம் 2.00 மணி முதல் 6.00 மணி வரை-கெளரவிப்பு நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மழையூர் சதாசிவம் திரு அருட்பா கச்சேரி நடைபெறும்.. அதன் பின் நிறைவு விழா. இறை வணக்கம். |
இந்த வைபவம் முடிவடைந்த பின்னர். வடலூரில் சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதப் பூசத்தின் போதும் 6 திரை நீக்கி ஜோதி வழிபாடு காண்பிப்பதைப் போன்றே. வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்திலும் அருட்பெருஞ் ஜோதி வழிபாடு நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், குறிப்பாக வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற தமிநாட்டிலும் இருந்தும் மர்றும் பல்வேறு நாடுகளிலுமிருந்தும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் நலம் பெறும்படி தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
கனகசபாபதி கேத்தீஸ்வரன், கே, விஜயலக்ஷ்மி, கே.தயானந்தன்.
இது குறித்த விசாரணைக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள்.
- இலங்கைத் தொடர்பு
தயவுத்திரு ஈஸ்வரன் – 0094773068974
- தயவுத்திரு சிவசுப்பிரமணியம்
0094776155930
சுவிஸ் தொடர்பு
தயவுச் செல்வி கே.விஜயலெக்ஷ்மி
0041448106985
இந்தியத் தொடர்பு
1. தயவுத் திரு ஜோதிமுருகன் (பழனி)
0091 94431 21368
2. தயவுத் திரு ஷண்முகம்
0431 2231229, 91 94434 22906
3. தயவுத் திரு ராமானுஜம்
0091 97898 72120
பாரீஸ் தொடர்பு
தயவுத் திரு அறிவழகன்
0033130734992
மலேசியத் தொடர்பு
- தயவுத் திரு சந்துரு
0060136227958
- தயவுத் திரு கிருஷ்ணன்
0060194740959
சிங்கப்பூர் தொடர்பு
தயவுத் திரு சிவகுமார்.
006598440090
இலங்கையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்திற்கு வரவிருக்கும் அன்பர்கள் அனைவரும் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பித்து, விரைவில் பெற்று வைத்துக் கொள்ளும்படியும் அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
வரவிருக்கும் 13.3.2010 (சனிக்கிழமை) மற்றும் 14.3.2010 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நாட்களில் மதுரை நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில் ஈரோட்டை அடுத்த மூலப்பாளையத்தைச் சேர்ந்த திரு பாண்டுரங்கம், RMP குழுவினர் மூலமாக, நோய் தீர்க்கும் மருத்துவ முகாம் நடைபெற இருப்பதை அனைவருக்கும் தெரிவித்து, தகுதியான நபர்கள் இருப்பின், மேற்படி மருத்துவ முகாமில் வந்து பயன் பெறலாம் என்பதையும் கூறினார்.
திண்டுக்கல் கியாரண்டி ஜூவல்லரி மார்ட் அதிபர் திரு ராமலிங்கம் அவர்கள், விண்ணப்பம் சொல்லி நிறைவு செய்தார்.
ஜோதி பாடல் மற்றும் விண்ணப்பம் சொல்லி இறுதியில் இந்த விழா இனிதே நிறைவடைந்தது. சுமார் 200 நபர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர்.
அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கி விழா, பிற்பகல் 3.15 மணி அளவில் நிறைவு செய்யப்பட்டது.