மேட்டுக் குப்பம் என்ற சித்தி வளாகத்தில் புதிய கட்டிடம் திரு அருட்பா சுவர்களில் பொறித்து வைத்தல். இந்த கட்டிடத்தைக் கட்டிய வேலூர் மாவட்டம் ராஜமன்னார்குடியைச் சேர்ந்த திரு யோகானந்த சுவாமி அவர்களைப் பற்றி. 2010ஆம் ஆண்டு தைப்பூச விழா வைபவத்தில் ஒரு நூல் வெளியிடப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தக் கட்டிடம், சித்திவளாகத்துக்குள் நுழையும் இடத்தில் மிக அற்புதமாக, திரு அருட்பாக்களையும், சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும், ஞான சரியைப் பாடல்களையும் கொண்டதாக விளங்குகின்றது. இந்த கட்டிடப் பணியை முடிக்கும் பணியை நெய்வேலி திரு கலிய மூர்த்தி அவர்களும், மற்றும் வேலூர் சன்மார்க்க அன்பர்களும் மும்முரமாக செய்து வருவதாக செய்தி வந்துள்ளது. வடலூர், மற்றும் மேட்டுக் குப்பம் சென்று தரிசனம் செய்யும் சன்மார்க்க அன்பர்கள், தவறாமல் இந்த கட்டிடத்தையும், அதனுள்...சத்திய ஞான சபையின் முன்புறம் உள்ள அகவல் மண்டபத்தில் அருட்பெருஞ் ஜோதி அகவல் முழுமையும் 12 தூண்களிலும் அருமையாக எழுதப் பட்டுள்ளதே போன்று, திரு அருட்பாக்களில் முக்கியமான பாடல்கள், இங்கே சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளன.
Write a comment