வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.14
வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
நாள்: 21.2.2010 ஞாயிறு
நேரம் – மாலை 6.00 மணி.
மாலை 6.00 மணி அளவில், வாராந்திர சொற்பொழிவு மற்றும், திரு அருட்பா அகவல் பாராயண நிகழ்ச்சி துவங்கியது.
மேனேஜிங் ட்ரஸ்டி, அனைவரையும் வரவேற்றார்.
முதலாவதாக, மதுரை நகரில் கடந்த வாரம் உயிரடக்கம் கொண்ட செல்வி லலிதா மணி அவர்களது ஆன்மா சாந்தி அடைந்து, மேல் நிலை அடைவதற்கு அனைத்து அன்பர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திரு அருட்பா பாடல்களை, சன்மார்க்க மூத்த அன்பர் திரு தாயுமானவர் அவர்கள் பாட அதனைத் தொடர்ந்து அருட்பா திரு ரெங்கநாதன் அவர்களும் பாடினார்.
6.45 மணி அளவில், தயவு திரு விஜய ராமன் “சுத்த சன்மார்க்கத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
வள்ளற் பெருமான் கற்பித்த சுத்த சன்மார்க்க நெறி தான் இதுவரை உலகில் வரப்பெற்ற நெறிகளில் எல்லாம் சிறந்தது. அந் நெறியினை, வள்ளற் பெருமான் சொல்லிய வண்ணம் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து, புற வழிபாட்டினை விட்டு, அக வழிபாட்டு முறையினை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சில இடங்களில், சத் விசாரம் மட்டும் நடைபெறுகின்றது. ஒரு சில இடங்களில், அன்னதானப் பணி சிறப்பாக நடைபெறுகின்றது. ஆனால், இரண்டையும் சேர்த்து, அக வழிபாட்டு முறையால், அனக நெறியோர்ந்து, வள்ளற் பெருமான் அடைந்த நிலையினை சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந் நிலை வள்ளற் பெருமானுக்கு மட்டும் சாத்தியமல்ல. அவர் சொன்ன ஒழுக்க நெறி முறைகளை வாழ்வில் தவறாமல் கடைப்பிடித்து, சத்விசாரம், பரோபகாரப் பணி செய்வோர் அனைவருக்குமே சாத்தியம்தான் என்றார்.
சிறப்பான அவரது சொற்பொழிவினை சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர்.
அதன் பின் மேனேஜிங் ட்ரஸ்டி, கீழ்க்காணும் செய்திகளை அன்பர்கள் அனைவருக்கும் தெரிவித்தார்.
கடந்த 13.2.2010 சனிக்கிழமை அன்று, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில், அருட்பெருஞ் ஜோதி உடல் நல மையம் துவக்கி, வந்திருந்த அன்பர்களுக்கு, திருப்பாலை சன்மார்க்க அன்பர் திரு ஹரி கோவிந்தன் அவர்கள் உடலினை சீராக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி முறைகள் எவ்வளவு பயன்படுகின்றன என்பதை விளக்கி, அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்து காண்பித்தார். வந்திருந்த அன்பர்களும், அதே முறையில் உடற்பயிற்சி செய்தனர் என்ற விபரத்தையும், வரவிருக்கும் வாரங்களிலும், அவர் இது போன்ற உடற்பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்குச் சம்மதிப்பதாகவும் தெரிவித்தார். வருகை புரிந்திருக்கும் அன்பர்களும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
வரும் 2010 மார்ச் முதல் வாரத்தில், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில், ஈரோடு மாவட்டம், அகரம் மூலப்பாளையத்தைச் சேர்ந்த சன்மார்க்க சாது திரு பாண்டு ரெங்கம் அவர்கள் மருத்துவ முகாம் நடத்துவதற்கு சம்மதித்துள்ளதை அன்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து, 300 முதல் 400 அன்பர்களுக்கு இம் முகாமில் மருத்துவம் செய்ய உத்தேசித்துள்ள விவரத்தையும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. தகுந்த அன்பர்களை அனைவரும் இங்கு வருவதற்கும் மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளும்படியும் அனைவரும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அடுத்தபடியாக, ஸ்ரீ லங்காவில், சாவகச்சேரி அருகே வேம்பிராயில் திரு கேத்தீஸ்வரன் மற்றும் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோரின் முயற்சியில், சத்திய ஞான கோட்டம் கட்டப்பட்டுள்ள விவரம் தெரிவிக்கப்பட்டது.
தற்போது வடலூரில் ராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் வைக்கப்பட்டுள்ள திரு நிலைக் கண்ணாடியை வைத்து, 29.6.2010 முதல் 15.8.2010 வரை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) திரு அருட்பா பாராயணம், முற்றோதல் நடத்துவதற்கு அவர் உத்தேசித்த செய்தியும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், 16.8.2010 அன்று, மருதூர், மேட்டுக் குப்பம், தீஞ்சுவை நீரோடை, கருங்குழி சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை ஆகியவற்றிற்கு திரு நிலைக் கண்ணாடியினைக் கொண்டு சென்று வழிபட்டு, 17.8.2010 அன்று திருச்சி வழியாக விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துச் சென்று, திருக்கோணேஸ்வரம், திருக்கேத்தீஸ்வரம் ஆகிய வழிபாட்டுத் தலங்களில், வழிபாடு செய்து பின்னர் சாவகச் சேரி சென்றடைவதை தெரிவிக்கப்பட்டது.
19.8.2010 அன்று யாழ்ப்பாணத்திலும், 20.8.2010 அன்று அளவெட்டியிலும், 21.8.2010 அன்றுசாவகச்சேரியில் உயிரிரக்கம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் விதத்தில் ஊர்வலம் நடத்தப்பட இருப்பதையும் தெரிவிக்கப்பட்டது.
23.8.2010 அன்று சத்திய தருமச் சாலை திறந்து பின்னர் 24.8.2010 அன்று சத்திய ஞான கோட்ட திருக்கதவம் திறப்புவித்து, பூஜைகள் செய்வதையும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர் நிகழ்ச்சிகள் 5.9.2010 வரை நடத்தப்பட்டு, 6.9.2010 அன்று சத்திய ஞான கோட்டத்தில் அருட்பெருஞ் ஜோதி தரிசனம் அனைவருக்கும் காண்பிக்க ஏற்பாடு செய்திருப்பதையும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. வடலூரில் காண்பிப்பதைப்போல், 6.9.2010 அன்று காலை முதல், 7.9.2010 அன்று காலை 6.00 மணி வரை 6 முறை அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளதையும் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், விசேட நிகழ்ச்சி, வள்ளலார் வரலாற்று நாடகம், நடனம், மழையூர் சதாசிவம் கச்சேரி, சொற்பொழிவு நிகழ்ச்சிகள் முதலான 6.9.2010 துவங்கி, 7.9.2010 அதிகாலை வரை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திருப்பதையும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விழாவிற்கு இந்தியாவிலிருந்து பெரு வாரியாக சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என்று திரு கேத்தீஸ்வரன் தம்பதியினர் கோரிக்கை வைத்துள்ளதையும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.
சத்திய ஞான சபையில் எவ்வாறு வழிபாடு செய்வது என்பதற்காக., திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், கடந்த 1938ஆம் ஆண்டில் எழுதிய சத்திய ஞான சபை தத்துவ விளக்கம் என்ற புத்தகத்தின் அடிப்படையில், கடந்த 30.1.2010 அன்று, வடலூரில் DVD (visual) வெளியிடப்பட்டதை அனைவருக்கும் தெரிவித்து போட்டுக் காண்பிக்கப்பட்டது. சத்திய ஞான சபை ஏன் தென்முகங் கொண்டு விளங்குகின்றது, என்பது குறித்து, திண்டுக்கல் சுவாமி அவர்கள் எழுதிய சாகாக்கலா அனுபவம் பெறுவதற்கு என்ற விபரம் அனைவருக்கும் அந்த DVD மூலம் காண்பிக்கப்பட்டது. ஒரு சில சன்மார்க்க அன்பர்கள் அதனைப் பெற்றுச் சென்றனர்.
சத்திய ஞான சபையின்கண் உட்புகுவதற்கு தகுதி எவ்வாறு பெற வேண்டும் என்பதை ஒரு வரைபடத்தின் மூலமும், திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் தயார் செய்து கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் மேனேஜிங் ட்ரஸ்டி விளக்கினார்.
அதன் பின்னர் மதுரை திரு ராமலிங்கம் என்ற அன்பர், தைப்பூச விழாவிற்கு மதுரை மாநகரிலிருந்து நடைபாதை பயணம் மேற்கொண்ட விபரத்தையும், செல்லும் இடமெல்லாம் வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை சொல்லிக் கொண்டு சென்றதையும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் கீழச் செவல்பட்டி அருகே உள்ள கிராமத்தில் சத்திய ஞான சபையைப் போன்று அமைப்பில் ஒரு கட்டிடம் உள்ளதைத் தெரிவித்தார்.
இறுதியில் ஜோதி பாடலுடன், விண்ணப்பம் சொல்லி, கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப் பட்டது.
கலந்து கொண்ட அன்பர்கள் விவரம்.
திரு தி தாயுமானவன். மதுரை.2
திரு அருட்பா ஜி. ரெங்கநாதன், ரயில்வே காலனி, மதுரை.1
திரு ஏ.ஜி.சந்திர மோஹன், ஊமச்சிகுளம்.
திரு தயவு விஜயராமன், நிலையூர்.
திரு ஆர். சந்திரசேகரன், ஐ.ஓ.பி ஆபீசர், வடக்கு மாசி வீதி மதுரை
திருமதி ஆர். சிவகாமி, ஸ்ரீ நகர், திருப்பாலை.
திரு அந்தோனி பிரபாகரன் (மாற்றுத் திறன் கொண்டவர்) நாராயணபுரம்.
திரு முரளீதரன், உத்தங்குடி, மதுரை
திரு இராமலிங்கபுரம், ஜெய்ஹிந்துபுரம், மதுரை
திரு ம. பாபு, காட்டு நல்லான் பிள்ளை பெற்றாள், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
திரு சொக்கலிங்கம், தெற்குவாசல், மதுரை
திருமதி புவனேஸ்வரி க/பெ சொக்கலிங்கம், தெற்குவாசல், மதுரை.
செல்வி மோஹனப்பிரியா, நாராயணபுரம்.
செல்வி அழகம்மாள், நாராயணபுரம்.
செல்வன் பால முருகன், நாராயணபுரம்.
செல்வி சங்கரி, நாராயணபுரம்
செல்வி சோனியா தேவி, ஹவுஸிங் போர்டு.
செல்வி ஷர்மிள, நாராயணபுரம்
செல்வி ஜனனி, நாராயணபுரம்.
செல்வன் விஷ்ணுகுமார், நாராயணபுரம்.
செல்வன் மணிகண்டன், நாராயணபுரம்.
செல்வி கல்யாணி, நாராயணபுரம்.
செல்வன் விக்னேஷ், நாராயணபுரம்
செல்வன் சந்தோஷ், நாராயணபுரம்.
செல்வன் அங்காளேஸ்வரி, நாராயணபுரம்.
செல்வன் திருவேங்கடம், நாராயணபுரம்.
செல்வன் தாமோதரன், நாராயணபுரம்.