மேட்டுக்குப்பத்தில் புதிய கட்டிடம்-அகரமே எண்கள் யாவும்-விளக்கம்.
Ramanujam
posted 23 months ago
22 Feb 2010 09:21:45 GMT 9:21:45 AM
1289 views
அகரமே எண்கள் யாவும். மேட்டுக் குப்பத்தில் உள்ள சித்தி வளாகத்தின் நுழை வாயிலில் வலது புறத்தில் சிதிலமற்றுக் கிடந்த கட்டிடம் தற்போது உயிர் பெற்று வருகின்றது. சுத்த சன்மார்க்கப் பாடல்களும், கருத்துக்களும், இக் கட்டிடத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அகரமே எண்கள் யாவும் என்ற விதத்தில், "அ" என்ற எழுத்துக்கள் அமைந்த 1 முதல் 10 வரை அருமையாக அனைவருக்கும் விளங்கும் விதத்தில், செதுக்கப்பட்டுள்ளது. அன்பர்களின் தகவலுக்காக, இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
'அ' என்ற எழுத்துக்குள் கூர்ந்து நோக்கினால், முதல் 'அ'-வில் '0' தெரியும். அடுத்த 'அ'-வில் '1' என்ற எண் தெரியும். அதுபோன்றே ஒவ்வொரு எழுத்திலும், 1 முதல் 10 எண்களும் தெரியும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. இதனை அன்பர்கள், கூர்ந்து கவனித்தால்தான் தெரியும். இது மிக அருமையான விளக்கம்.