2010 Thai Poosam Function, Vadalur-Photos.
Ramanujam
posted 23 months ago
20 Feb 2010 09:15:27 GMT 9:15:27 AM
1312 views
2010 Thai Poosam Function, Vadalur-Photos.

எண்கோணக் கைப்பிடிச் சுவர்.---- இந்திரிய ஒழுக்கத்தாற் பெறப்படும் அனுபவ ஞானத்தினின்று கரண ஒழுக்க அனுபவ ஞானம் பெறல் எளிதே. ஆதலால் இது குறிக்கும் எண் கோணக் கைப்பிடிச் சுவர் அதிக உயரமின்றித் தாழ்ந்தும், இலேசாகக் கடக்கக் கூடியதாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கரண் ஒழுக்க அனுபவம் பெற்றுக் கொண்டால், மனதில் ஓர்மையும் தயவும் விளங்கலால் அக நோக்கி அருட்பெருஞ் ஜோதிக் கடவுள் நிலையுணரப்படும். அவ்வுண்மையைக் குறிக்கவே அச்சிறு கைப்ப்டிச் சுவர் கடந்து எட்டடி சென்று, ஞானசபைத் தாய்ச் சுவரின் கண்ணமைந்த ஜன்னல்கள் வழி ஞான சபைக் குள்ளிலங்கும் அருட்பெருஞ் ஜோதி அகண்ட தீபத்தைக் காணும்படியாயுள்ளது.