2010 தைப்பூசத் திருவிழா-வடலூர் காட்சிகள்.
Ramanujam
posted 23 months ago
20 Feb 2010 05:13:34 GMT 5:13:34 AM
1335 views
2010 வடலூர் தைப்பூசத் திருவிழாக் காட்சிகள்-இருப்புச் சங்கிலி நம் சுவாசத்தைக் குறித்தலால், இச்சுவாசமாகிய உயிரனுபவம், அதாவது, ஜீவதயை முதற்படியாயிருக்கின்றது. ஆதலால் ஜீவதயையுடையவர்கள், கொலையும் புலையையும் தவிர்த்தவர்கள் மட்டுமே உயிரனுபவ முடையவர்கள் என்றும் அதாவது இரும்புச் சங்கிலியின் இரகசிய மறிந்தவர்களென்றும், விளங்கலால், அவர்கள் மட்டுமே அவ்விரும்புச் சங்கிலி வாயிலைக் கடந்து, உட்செல்ல திருவருள் ஆணையால் அனுமதிக்கப்பட்டவர்களாவார்கள். இந்த இருப்புச் சங்கிலியினை தமது உடம்பு முழுவதும் படும்படியாகச் செய்து, இதன் புனிதத்தை பிறரும் அறிய அங்குள்ள மக்கள் தொழுது வழிபடுகின்றனர். 