2.1.2010-இருபத்தொன்றின் சிறப்பு-தயவுக்குறளில் விளக்கம்..
Ramanujam
posted 25 months ago
02 Jan 2010 05:38:24 GMT 5:38:24 AM
964 views
புத்தாண்டு 2010 மலர்ந்துள்ளது. வள்ளல் பெருமானின் அனக நெறி விளக்கங்கள் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்களின் மூலம் இந்த இணைய தளத்தின் வழியாக பரப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
2.1.2010 என்பது இன்றைய தேதி ஆகும்.
இருபத்தொன்று என்பதற்கு சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய
தயவுக் குறளின் முதலாம் அத்தியாயத்தின் 2ம் குறளுக்கு விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இணைய தளத்தின் மூலம் அவ்வதிகாரம் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த 21 என்ற எண்ணிற்கு அவர்கள் அளித்துள்ள விளக்கம்,
மீண்டும் அன்பர்களின் பார்வைக்கு வெளியிடப்படுகின்றது.
தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முதல் அதிகாரம்
(பாயிரம்)
தயாநெறி.
2. |
எண்குணத்தான் ஐந்தொழிலான் யான்காண் தயவாகி உண்மலர்ந்த(து) இன்றுஇருபத் தொன்று. |
2. |
கு. வி.
தயவு ஒளி நெறி உள்ளிருந்து உதித்து உலகில் நிரம்பக் கண்டு கொள்ள நேர்ந்துள்ளது. இது சமயம், உலகில் நிறைந்த தயா ஜோதியே, எண்குணத்தான் என்றும். ஐந்தொழிலான் என்றும் காண்கின்றோம்.
தயா உணர்வினாலே கருதி, அத்தயவினாலே அறிந்து கொள்ளப்பட உள்ள கடவுள் தத்துவம் தான் இங்கு எண்குணத்தான். எண்ணத்தகு தன்மையன் எனவும், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐஞ்செயல் புரிகின்றவன் எனவும் தெளியலாகும்.
இருபத்தொன்று என்றதின் விளக்கம்.
இரு-பெரிய, பத்து-பற்று, ஒன்று-பொருந்து. அதாவது, அக மலர்ந்த தயவு ஒளி நமக்கு பெருங் கடவுட் பற்றைத் தந்து அதனோடு ஒன்றுபடச் செய்வதாம்.
மேலும் இத்தினம், (இக்குறள் வெளிப்பட்ட நாள்) 2.1.1956. இது 2-ம், 1-ம் நாளும் மாதமுமாகி நிற்க (1+9+5+6) 21-ஆண்டு எண்ணைக் குறிப்பதாம்.
அன்றியும், நமது ஆன்மா யகரமாகிய பத்து என்ற எழுத்து எண்ணால் குறிக்கப்படுவதால், சீவான்ம பரமான்ம ஐக்கிய நிலையை இருபத்து ஒன்றாகக் கொள்ளலாகும்.
சைவ ஆகமத்தில், சிவகுணம்-8, சீவகுணம்-8. அது,
சிவகுணம் |
8 |
ஜீவகுணம் |
8 |
1. தன் வயத்தன் ஆதல் |
1. பராதீனன் |
2. தூய உடம்பினன் ஆதல் |
2. துக்க தேகி |
3. இயற்கை உணர்வினன் ஆதல் |
3. செயற்கை உணர்வினன் |
4. முற்றும் உணர்தல் |
4. சிற்றுணர்வினன் |
5. இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல் |
5. பந்தன் |
6. பேரருள் உடைமை |
6. காடின்யன் |
7. முடிவிலா ஆற்றலுடைமை |
7. நிர்பவன் |
8. வரம்பிலின்பமுடைமை |
8. மலதேகி |
சிவகுணம், ஜீவகுணம் எட்டெட்டாகவும் ஐந்தொழில் கொண்டு சிவம், ஜீவனைத் தன்மயம் ஆக்கிக் கொள்வதும் குறிக்கப்படும். ஆதலால், இந்த (8+8+5-ம்) இருபத்தொன்றையே குறிப்பதாம்.
அன்பு மதம் எனப்படும் இசுலாத்தில் பிறைக்குறியின் அடியிலிடும் 786ம் இருபத்தொன்றே.
கிறிஸ்துவ உண்மையும் இதுவே என்பதை, ஏசுவை 18 அடி சிலுவையில், ஒன்றில் மூன்றாம் (திரி ஏகத்துவம்) அதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை அச் சிலுவையில் சேர்த்துள்ளனர். இதனால் (18+3=21) அதுவும் 21 ஆம்.
இவை போன்று பிற மதத்தும் காணலாம். ஆதலின், இச் சுத்த தயா நெறிக்குள் எந்நெறியும் அமைவதாம்.