ஏழாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வள்ளல் பெருமானின் திரு அருட்பா.
Ramanujam
posted 26 months ago
22 Nov 2009 23:10:29 GMT 11:10:29 PM
1235 views
தமிழ் நாடு பாட நூல் திட்டத்தின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பெறும்
7-ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் திரு அருட்பா.

மதுரையில் நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில், வாராந்திர திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு முதலான நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு குழந்தைகள் வருகை தருவர். அவ்விதம் வருவோரில் திரு குருசாமி S/O பால்ராஜ் என்ற மாணவனும் ஒருவன். அவன் 7-ம் வகுப்பு படித்து வருகின்றான்.22.11.2009 அன்று வாராந்திர திரு அருட்பா பாராயண நிகழ்ச்சியில், இந்த மாணவன், வள்ளல் பெருமான் பாடிய திரு அருட்பா தான் படிக்கும் தமிழ்ப் பாடத்தில் வந்திருப்பதாகத் தெரிவித்து, மனப்பாடமாகக் கீழ்க்காணும் பாடலையும் ஒப்புவித்தான்.

சக குழந்தைகள் அனைவரும் அவன் பாடியதை விரும்பிக் கேட்டனர்.
தமிழ்நாடு பாட நூல் திட்டத்தின் மூலம் வழங்கப்பெறும் 7-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்திலிருந்து அவன் பாடிய திரு அருட்பாவும், அதற்கான உரையும் கீழே அன்பர்களின் தகவலுக்காக தரப்படுகின்றது.




இப்பாடல் கடவுள் வாழ்த்தாக, இந்தப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது, இதன் சிறப்பு.