மதுரை மாவட்டத் தலைமைச் சங்க நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கட்டிடம் கொடுத்தவர்கள்.
மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகள் இதுவரை மாவட்டத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்கள் இல்லத்தில் நடைபெற்று வந்தது.
மாவட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தனியான ஒரு இடம் இல்லாமல் இருந்த விபரத்தினை, மேற்படி ஊரைச் சேர்ந்த திரு சசிதரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் திரு T.R. ஜவஹர்லால் தெரிவித்தார்.
மதுரையில் வைகை நதியின் அருகில் ஓபுளா படித்துரை உள்ளது. அதன் அருகே வாழைப்பழ வியாபாரிகள் சங்கத்தின் அருகில் அவர்கள் கட்டி வைத்திருந்த கட்டிடத்தில் சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி, திரு சசிதரனின் பெற்றோர் சம்மதம் அளித்தனர்.
கடந்த 3.10.2009 அன்று இந்தக் கட்டிடத்தில்தான் வள்ளற் பெருமானின் 187வது அவதரிக்கவுற்ற திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வள்ளற் பெருமான் வகுத்துத் தந்த சுத்த சன்மார்க்க நெறி மதுரை மாவட்டத் தலைநகரில் பரவுவதற்கு
வழி வகுத்துத் தந்த .. அந்தப் பெருமைக்குரியவர்கள் இதோ...
மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லாலுடன்....
..
அவர்களது இந்த செயலுக்கு சன்மார்க்க உலகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
மதுரை மாவட்டத் தலைமை சங்க நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கட்டிடம் கொடுத்தவர்கள்.