DAEIOU - தயவு
11-10-09 Sri Ram Karthik Polymers-Coimbatore 187th Incarnation Day of Vallalar Celebration.

11.10.2009-கோயம்புத்தூரில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 187ஆவது திரு அவதார விழா
மற்றும் ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத்தின் 18ம் ஆண்டு விழா.
வரும் 11.10.2009 ஞாயிற்றுக் கிழமை அன்று. காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கோயம்புத்தூர் நகரில் உள்ள சின்ன வேடம்பட்டியில் அமைந்துள்ள கெளமார மடாலயத்தில், கீழ்க்காணும் விழாக்கள் நடைபெற உள்ளன.
(1) திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 187வது திரு அவதார விழா.
(2) ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத்தின் 18ம் ஆண்டு விழா.
இதனைக் கண்ணுறும் அன்பர்கள் அனைவரும் கோயம்புத்தூரில் சின்ன வேடம்பட்டியில் அமைந்துள்ள கெளமார மடாலயத்தில் 11.10.2009 அன்று வருகை தந்து, விழாவினைக் கண்டு மகிழவும், வள்ளற் பெருமான் அருளிச் சென்ற சுத்த சன்மார்க்க அருள் நலம் பெறவும் அந் நிறுவனத்தார் அனைவரையும் தயவுடன் அழைக்கின்றனர்.