திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 187வது பிறந்த நாள் விழா பேரணி..
நடைபெறும் இடம்: மதுரை.
நாள் 3.10.2009
நேரம் : துவக்கம் 3.30 மாலை.
மேற்காணும் விழா குறித்த செய்தி கடந்த வாரம் இந்த இணைய தளத்தில் பிரசுரம்
செய்யப்பட்டது.
இது குறித்து, மதுரை தினமலர் நாளிதழில், 2.10.2009 வெள்ளிக் கிழமை அன்று இச் செய்தி பிரசுரமாகி உள்ளது.
வள்ளலார் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்க நெறி குறித்து, இப் பேரணியில் துண்டுப் பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கி, சுத்த சன்மார்க்க நெறியில் வாழ்க்கையினை நடத்தும்படி வலியுறுத்தப்பட உள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா சன்மார்க்க சங்க அங்கத்தினர்களும், மற்றும் அண்டை அயல் மாவட்டங்களில் உள்ள சன்மார்க்க அன்பர்கள், தமது குடும்பத்தினர், உற்றார் உறவினருடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
டி. ஆர். ஜவஹர்லால், திரு சுப்பிரமணியன், திரு செங்காயிரம் பிள்ளை.
தலைவர். செயலாளர். உப தலைவர்.
மாவட்ட சன்மார்க்க சங்கம். மதுரை.