அருட்பெருஞ்ஜோதி ஞானச்சித்தர்.
மதுரையிலிருந்து வெளியாகும் தினமலர் 23.8.2009ந் தேதிய நாளிதழில், வானதி பதிப்பகத்திலிருந்து வெளியான மேலே குறிப்பிட்ட புத்தகத்தின் மதிப்புரை கீழ்க்கண்ட விதத்தில் பிரசுரமாகி உள்ளது.
வள்ளல் பெருமானைப் பற்றியும் அவரது சுத்த சன்மார்க்க நெறியினைப் பற்றியும் எந்த அளவிற்கு தெரிந்து - இந்த நூல் ஆசிரியர் எழுதியுள்ளார் என்பதை இணைய தள பார்வையாளர்களின் யூகத்திற்கே விடப்படுகின்றது.
4 Comments
I am sorry that a reputed publisher like Vanathi should encourage such writings.
I request devotees not to buy or read such books. Instead they can read Arutpa and get anmalaabam.
V.Namasivayam
இந்த கட்டுரையை பார்க்கும் போது திரு.கமலகண்ணன் சுத்தசன்மார்க்கத்தை முழுமையாய் அறிய வேண்டும் என நினைக்கிறோம்.
அ.வள்ளலாரின் சன்மார்க்கம் சமயங்களின் சாரம் அல்ல.ஆன்மநேய ஒருமைப்பாடு தான் வள்ளலார் சன்மார்க்கத்தின் சாரம்.ஆன்மநேய ஒருமைப்பாடு சமயங்களில் சொல்ல பட வில்லை.சுத்த சன்மார்க்கம் சமயம் க்டந்த மார்க்கம்.
ஆ.வள்ளலார் தயவு,கருணையால் தான் முத்தியை அடைந்தார்.கடும் தவம் அல்ல.
சன்மார்கத்தை பொறுத்த வரை கருணை,தயவு தான் தவம் ஆகும்.வள்ளலாரின் கருணை,தயவு பற்றி எதுவும் இதில் குறிப்பிட வில்லை.
இ.வள்ளலார் தங்கம் செய்ததாக குறிப்பிடுகின்றார்.சுத்த சன்மார்க்கம் என்ற சுத்த சன்மார்க்க தங்கதை தவிர எதையும் செய்ய வில்லை.தங்கம் செய்ய அவருக்கு தெரியலாம்.அதற்காக நேரத்தை வீண் அடிக்க தேவை இல்லை.மக்களின் விருபத்துக்காக பல அற்புதங்களை செய்து இருக்கலாம்.ஆனால் விருப்பதோடு செய்ய வில்லை.வள்ளலார் மந்திரவாதி இல்லை.
ஈ.வள்ளலார் இல்லற வாழ்வு செய்தாரா?,துறவற வாழ்வு செய்தாரா? அதை அறிய வேண்டியது இல்லை.சன்மார்க்க வாழ்வை இன்று வரை நம் மூலம் நடத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
உ.அவர் மனைவி இறந்ததும் முக்காடு போட்டத சொல்லுகிறார்.வள்ளலார் கண்கள் அருளினால் ஒளி பெற்றதால் கண்களின் மின்சார ஒளி பிறருக்கு அபாயத்தை உண்டாக்கி விட கூடாது என்பதற்காக ஒரு கண்ணை மறைத்து முக்காடு போட்டார்.
ஊ.கமலகண்ணன் அவர்கள் வள்ளலாரின் புற வாழ்கையை தான் சிந்தித்ததாக தெரிகிறது.அவர் வள்ளலாரின் அக வாழ்க்கையை சிந்திக்க வேண்டும்.
எ.வள்ளலாருக்கு புகழ் கிடைக்க வில்லை ராமகிருஷ்ணர் போல என என்ன வேண்டாம்.எந்த பெரியோருக்கும் உண்மையான மதிப்பை மக்கள் கொடுக்க வில்லை.தேவைக்கு மட்டும் தான் அவர்கள் பின்னால் சென்றனர்.வள்ளலார் பல அற்புதங்களை செய்து மக்களை சுத்த சன்மார்க்கத்துக்கு இழுத்தார்.புகழ் பெறுவதை எந்த பெரியோரும் விரும்ப வில்லை.பெரியோருக்கு கிடக்க வேண்டிய சிறப்பு கிடைத்து தான் தீரும்.வள்ளலார் கருணையாக,என் தோழி சிந்துஜா&அருள்ஜோதி சுஜாதா.
இந்த சேதி விமசனத்துக்கு தான் முன்னர் கருத்து அளித்தோம்.
புத்தக மதிப்புரை அல்ல புத்தகத்தை முழுமையாய் படிக்காமல் சரியான மதிப்புரை கொடுக்க
முடியாது சேதி தாளில் புத்தகத்தின் ஒரு சில கருத்துகள் மட்டும் தான் இடம் பெற்றன. இந்த புத்தகம் எப்படி எழுத பட்டு இருந்தாலும் புத்தகத்தை படிக்காமல் சொல்ல முடியாது வள்ளலாரை பற்றி புத்தக ஆசிரியர் வேறு என சொல்லி இருக்கிறார் என்பது புத்தகத்தை படித்தால் தான்
தெரியும். எவ்வளவு புத்தகத்தில் உண்மை இருக்கிறதோ அதற்கு தகுந்த மதிப்புரை அந்த புத்தகத்துக்கு
உண்டு. வள்ளலாரின் பாடல்களை கருத்துகளை புத்தகம் முழுதும் எப்படி கையாண்டுள்ளார் என்பது புத்தகத்தை படித்தால் தெரியும். மதிப்புரை கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளதால் புத்தகத்தை படித்து தான் சொல்ல வேண்டும். படிப்பதால் தவறு இல்லை. சன்மார்க்கத்துக்கு மாற்று கருத்து இருந்தால் புத்தக ஆசிரியருக்கு வள்ளலாரின் சன்மார்கத்தை புரிய வைப்பது சுத்த சன்மார்க்கிகளுக்கு உரிமை. இந்த புத்தகத்தை படித்த நல்ல அன்பர் இந்த புத்தகத்துக்கு சரியான மதிப்புரை கொடுக்கலாம். அருட்பெருஞ்சோதி சித்தர் என இந்த புத்தகத்தை எந்த அடிப்படையில் ஆசிரியர் எழுதினார் என்பது தெரிய வில்லை. வள்ளலார் கருணையாக,அருள்ஜோதி சுஜாதா.
ஆசிரியர் பெயர் முதலானவை தினமலர் செய்தியிலேயே உள்ளது.
தேவைப்படுவோர், அதனை வாங்கிப் படிக்கலாம்.
தினமலரில் வள்ளலார் குறித்து, இந்த நூல் ஆசிரியர் எந்த
அளவிற்கு தனது கருத்தினை வெளியிட்டுள்ளார் என்பதை
மற்றுமொருவர் மதிப்பிட்டு, point by point குறிப்பிட்டுள்ளார்.
அதனைத்தான் அன்பர்களின் கவனத்திற்கு கொண்டு
வரப்பட்டது.
வள்ளல் பெருமானின் நிலை என்ன, அவரது
சுத்த சன்மார்க்க நெறி எவ்வளவு உயர்ந்தது என்பது
தெரியாமல் இவ்வாறான நூல்கள் எல்லாம் தற்போதும்கூட
வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தான்
கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
அந்தப் புத்தகத்தின் மதிப்புரை என்ற விதத்தில் தினமலர்
மதுரைப் பதிப்பில் வெளியிட்ட தகவல்கள் எத்தனை லட்சம்
(பத்திரிகை) பிரதிகளின் மூலம் அதனைக் காணும்
மக்களின் பார்வையில் படும் என்பதுதான் மிகவும் .. ..
மிகவும் .. மிகவும் ......