DAEIOU - தயவு
வள்ளலார் மாநாடு-மலேயாவில் நடைபெற்றது.

மலேயாவில் வள்ளலார் மாநாடு

கடந்த 15.8.2009 (சனிக்கிழமை) மற்றும் 16.8.2009 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய 2 நாட்களில்

மலேயாவில், வள்ளலார் மாநாடு நடைபெற்றது.

தற்போது நிலவி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் அனைத்து இடங்களிலும் பரவி வருவதால்,

மலேசிய அரசு, பெரும்பாலும் கூட்டங்கள் நடைபெறுதல் முதலான நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி

அறிவித்தது. எனவே மிகச் சொற்ப அன்பர்கள் கலந்து கொண்டதுடன், மேற்கண்ட 2 நாட்களிலும்

குறிப்பிட்டபடி இம் மாநாடு நடந்து முடிவுற்றது.

தமிழ் நாட்டிலிருந்து சிதம்பரம் சன்மார்க்க அன்பர் திரு நமசிவாயம் அவர்கள்,

சேலத்திலிருந்து சன்மார்க்க அன்பர் திருகுப்புசாமி அவர்கள், வடலூரிலிருந்து சன்மார்க்க

அன்பர் தொண்டர் குல பெருமாள் ஐயா அவர்கள் மற்றும்

ஆத்தூர் சன்மார்க்க அன்பர் மருத்துவர் திரு வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டதாகத்

தகவல் வெளியாகியுள்ளது.