மதுரையில் மாவட்ட சன்மார்க்க சங்கம் அமையும் இடம்.
மதுரையில் மாவட்ட சன்மார்க்க சங்கம் இதுவரையில் மாவட்டத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்கள் இடத்திலும், இல்லையாயின், செயலாளர் திரு சுப்ரமணியம் அவர்கள் இடத்திலும் நடந்து வந்தது. அதற்கென தனிக் கட்டிடம் ஏதும் இல்லை.
தற்போது சன்மார்க்க அன்பர் திரு சசிதரன் தனக்குச் சொந்தமான கட்டிடத்தை மாவட்ட சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென ஒதுக்கித் தந்துள்ளார். மேற்படி கட்டிடத்தை, செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோர் கடந்த 5.8.2009 அன்று பார்வையிட்டு வந்தனர். சிறு சிறு மராமத்துகளை செய்து விட்டால், அந்த கட்டிடத்தை சன்மார்க்க சங்கச் செயல்பாடுகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கூடிய விரைவில், இந்தக் கட்டிடத்தில், மாவட்டச் சங்கம் செயல்பட உள்ளது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மற்றும் வள்ளல் பெருமானின் ஆசியால் அன்பர் திரு சசிதரனுடைய சன்மார்க்கப் பணிகள் தழைக்கவும், அவரது இல்லத்தார் பல வளமும் பெற்று நீடூழி வாழவும் வாழ்த்துவதற்காக, இந்தச் செய்தி இங்கே வெளியிடப்படுகின்றது.