DAEIOU - தயவு
அருட்பூரண சித்தி யோகம். மதுரை வில்லாபுரத்தில் நடைபெறல்.

அருட் பூரண சித்தி யோகம்-மதுரை-வில்லாபுரத்தில் பயிற்சி முகாம்.

நடத்துபவர் : திருவண்ணாமலை அருள் திரு பாபு சாது மற்றும் அன்பர்கள்.

நாள் 17.7.2009 முதல் 19.7.2009.

மதுரை நகரில், வில்லாபுரத்தில் அமைந்துள்ள R. சுப்பிரமணிய நாடார்-மீனாட்சி அம்மாள் கல்யாண மஹாலில், திருவண்ணாமலை அருள் திரு பாபு சாது, தனது குழு அன்பர்களுடன், 17.7.2009 முதல் 19.7.2009 முடிய

அருட்பூரண சித்தி யோகம் என்ற முறையில், யோகம், தியானம், மற்றும் வள்ளலாரைப் பற்றிய சத் சங்கம் ஆகியவற்றை நடத்த் ஏற்பாடு செய்திருந்தார்.இந்தக் கட்டிடம், அருப்புக் கோட்டை ரோட்டில், ஏற்கனவே செயல்பட்டு வந்த வள்ளலார் கோட்டம் கட்டிடத்தை அடுத்து அமைந்துள்ளது.

17.7.2009 அன்று,. மாலை, இதற்கென பயிற்சியில் சேர வந்த அன்பர்கள் பெயர் விவரம் சேகரிக்கப்பட்டது. அன்றைய தேதியில், இரவு வரை, சத் சங்கம் நடைபெற்றது. மூத்த சன்மார்க்க அன்பர்கள், வள்ளலாரின் கொள்கைகள் குறித்து பங்கேற்ற அனைவருக்கும் எடுத்துக் கூறினர்.

பங்கேற்ற அனைவருக்கும் வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, திரு அருட்பா பாடல்கள் அடங்கிய சிறு கையேடு வழங்கப்பட்டது.

திரு சரவணன், மற்றும் திரு ஜானகி ராமன் மற்றும் மேற்படி குழுவின் அங்கத்தினர்கள், யோக, தியானப் பயிற்சி விளக்கங்களை, பங்கேற்ற அன்பர்களுக்கு விளக்கினர்.


வந்திருந்த அனைவரும் இந்தப் பயிற்சியினைக் கற்றனர். இடையிடையே, திரு அருட்பிரகாச வள்ளலாரின் திரு அருட்பா பாடல்கள் மற்றும் சத் சங்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. பயிற்சி முடிவுற்றதும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இதேபோன்று ஏற்கனவே பிற இடங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்ட அன்பர்களும், இங்கு வந்து, தொடர் பயிற்சியில் கலந்து கொண்டனர். அவர்கள், அனுபவ உரை, அவர்களாலேயே சொல்லப்பட்டது.

பின்னர், திருவண்ணாமலையில் அருள்திரு பாபு சாது செய்து வரும் சன்மார்க்கப் பணிகள் குறித்த குறும்படம் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. அனைவரும் வள்ளலார் சொல்லிச் சென்ற ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கும்படி வலியுறுத்தப்பட்டது.

பங்கேற்றவர்கள், தங்களுக்கு, இந்த தியான, யோகப் பயிற்சி மற்றும் வள்ளலாரின் கொள்கைகள் முதலானவை வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என, இந்தப் பயிற்சி உணர்த்துவதாக அமைந்தது என்றனர்.

மூலிகை மருந்துகள், ஆடியோ சி.டி.கள், திரு அருட்பா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் முதலானவை, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பயிற்சிக்கு வந்த அனைவருக்கும் பயிற்சி நாட்களில், இலவச உணவு வழங்கப்பட்டது.