<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

பாண்டிச்சேரி ஆரோவில் நகரில் உள்ள மாத்ரி மந்திர்.

Ramanujam
posted 30 months ago
17 Jul 2009 10:02:21 GMT 10:02:21 AM

1429 views

பாண்டிச்சேரி அருகே உள்ள ஆரோவில் உலக சமுதாய அமைப்பில் உள்ள மாத்ரி மந்திர்.


           கடந்த 25.4.2009 அன்று, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்கள், மதுரையிலிருந்து திரு தாயுமானவர், திரு ஹரி கோவிந்தன், திரு சந்திரமோஹன், மாவட்ட சன்மார்க்க சங்க செயலாளர் திரு சுப்பிரமணியம், அருட்பா திரு ரெங்கநாதன், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம் ஆகியோருடன் மற்றும் ஒரு சில அன்பர்களுடன், திருவண்ணாமலையில் ஆலமரக் குகாஸ்ரமத்தில் 26.4.2009 அன்று நடைபெறும் விழாவிற்கு அழைத்துச் சென்று அவ்விழாவில் தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தினார், அவ்விழாவில் 26.4.2009ந் தேதி, , அதிகாலையில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் மதுரை அன்பர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று, பாடச் செய்வித்தார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாமும் மதுரையிலிருந்து அழைத்துச் சென்றிருந்த அன்பர்களுடன் கலந்து கொண்டு அவ் விழாவினைச் சிறப்பித்தார்.


   


             (Sanmarga Members from Madurai-Matri Mandir is seen in this picture)


         அதற்கு முதல் நாள் அதாவது 25.4.2009 அன்று, அனைவருடனும் அவர் பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் (auroville)  நகரில் அமைந்துள்ள மாத்ரி மந்திருக்குள் (MATRI MANDIR) அழைத்துச் சென்றார். பல நாட்டினரும் வந்து தங்குவதற்கென்றே அரவிந்தாஸரம அன்னையால், ஆரோவில் நகர் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந் நகர் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இங்கு பல்வேறு நாட்டினரும் வந்து தங்கியுள்ளனர்.


       அந்த ஆரோவில் நகரில் தங்குவதென்றால், எந்த நாட்டவரும் வந்து தங்கலாம். முதன் முதலில், 5 ஆண்டுகள் அங்கேயே பயிற்சி எடுக்க வேண்டும். தன்னலம் கருதாது உழைக்க வேண்டும்.அங்குள்ள சட்ட திட்டங்களுக்குத் தம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் சேவை மனப் பான்மை உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப் படுகின்றனர். அதில் தேறுபவர்களுக்கே அந்த ஆரோவில் பன்னாட்டவர் வாழிடத்தில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கும் என்று சொன்னார்கள்.


இந்த ஆரோவில் நகர் குறித்து 8.9.1965 அன்று அரவிந்தாஸ்ரம அன்னையார் எழுதிய குறிப்பு வருமாறு-


"Auroville wants to be a universal town where men and women of all countries are able to live in peace and progressive harmony, above all creeds, all politics and all nationalities. The purpose of Auroville is to realise human unity -  The Mother.


       அந்த ஆரோவில் உள்ள மாத்ரி மந்திரி என்ற ஒரு வட்ட வடிவான சர்வ சமயப் பிரார்த்தனைக் கூடம் அனைவரும் ஈர்த்தது.   இங்கு செல்வதென்றால், ஓரிரு நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


 


.    


                         Matri Mandir.                                                      (Construction Inside-Model)


            எழுத்து மூலமாகவோ அல்லது தொலலபேசி மூலமாகவோ, ஆரோவில் மாத்ரி மந்திர் (Matri Mandir) நிர்வாகத்துடனோ தொடர்பு கொண்டு, வருகை குறித்துச் சொல்லி விட வேண்டும். முன் அனுமதிக்காகப் பதிவு செய்யாத எவரையும் அவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை



            The Matri Mandir Building has been covered by such of these golden coated


             plates. One among the plate is placed in front of the Mandir for the information


                                                               of the viewers.    


    அப்படி முன் அனுமதி பெற்றுச் சென்றவர்களுக்கு, அந்த ஆரோவில் நகரைப்பற்றியும், மாத்ரி மந்திரைப்பற்றியும் விரிவாக முதலில் விளக்கிச் சொல்லப்படுகிறது.




        (Annual function - All the nationals sitting together in front of the Matri Mandir)


          அதன் பின்னர், நிசப்தமாக அந்த மாத்ரி மந்திரிக்குள் செல்வதற்கு, அங்கு பணிபுரியும் அன்பர்கள் அழைத்துச் செல்கின்றனர். அதன் அமைப்பு தூரத்திலிருந்து பார்க்கும் போது வட்ட வடிவமாக உள்ளது போல் தெரிகின்றது. உள்ளே இரண்டு அடுக்காக மாடி போன்று அமைந்துள்ளது.



       உள்ளே செல்லும்போது, காலில் சாக்ஸ் அணிந்துகொண்டுதான் சர்வ மதப் பிரார்த்தனைக் கூடத்துக்குச் செல்ல இயலும். அங்கேயே சாக்ஸ் கொடுக்கின்றனர். அதனை அணிந்து கொண்டால், நடக்கும்போது சப்தம் எழுவதில்லை.


             இரண்டாம் மாடியில் உள்ள தியானக் கூடத்தில் சுற்றிலும் 8 தூண்கள் உள்ளன. நடுவில், வட்ட வடிவில் ஒரு கண்ணாடிக் குடுவை, ஸ்வஸ்திக் அமைப்பு போன்ற கம்பியின் நடுவில் தகதகக்கிறது. மேலே இருந்து ஒளிக் கற்றைகள், இந்த வட்ட வடிவக் கண்ணாடிக் குடுவையில் உள்ளே சென்று, அந்த மாத்ரி மந்திரின் கீழ்புறம் வரை செல்வதற்கு நடுவிலே அமைப்புச் செய்திருக்கின்றனர்.


          மூன்று நாட்டிலிருந்து வந்த இஞ்சினியர்களைக் கொண்டு, அரவிந்த ஆஸ்ரம அன்னையின் பரிசீலனையில், ஒரு அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த மாத்ரி மந்திர் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே சென்று அமைதியாக தியானம் (சுமார் 10 நிமிடம்வரை) செய்து விட்டு வருவதற்கு அனுமதிக்கின்றனர்.



                      



       Meditation inside the Matri Mandir-in front of the Globe.



        வள்ளல் பெருமான், சத்திய ஞான சபையின் உள்ளே செல்லும் 12 வயதிற்கு உட்பட்ட வயதினரையும், அல்லது 72 வயதிற்கு மேற்பட்டவரையும் முழங்காலில் வஸ்திரம் கட்டிக் கொண்டு, சத்திய ஞான சபையின் உள்ளே சென்று தூசு துடைத்தல் மற்றும் சத்திய ஞான தீபம் ஏற்றுதல் போன்ற பணிகளை பார்த்துவர அனுமதித்துள்ளார்.


        அந்த நடைமுறையைப் பின்பற்றியோ, அல்லது வேறு எதனாலோ, சாக்ஸ் அணிந்து கொண்டு, தியான அறைக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.


         அதன் உள்சென்றதும், அங்கு உள்ள சூழல், மெளனம், அங்கு அமர்ந்து செய்யும் தியானம் மிக ரம்யமாக உள்ளது

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
திருவருளால் பார்க்க நேர்ந்த இடங்கள்

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace