திருவண்ணாமலை ஆலமரக்குகை வழிபாடு.
Ramanujam
posted 30 months ago
16 Jul 2009 10:26:48 GMT 10:26:48 AM
1722 views
ஆலமரக் குகை அஸ்ரமம் அறக்கட்டளை வருடாந்திர வழிபாடு,
திருவண்ணாமலை.
நாள் ..26.4.2009.
திருவண்ணாமலையில் மலை மேல் ஆலமரக் குகாஸ்ரமம் ஒன்று உள்ளது. இங்கு ரமண மஹரிஷி போன்ற மகான்கள் எல்லாம் வந்திருந்து தவம் செய்து சென்றிருக்கின்றனர்.
இந்த இடத்தில் செளராஷ்ட்ர சமூகத்தில் மூத்த பெரியவர் தவம் செய்து வந்துள்ளார். அவரது ஞாபகார்த்தகமாக, வருடந்தோறும் செளராஷ்ட்ர சமூகத்தினர் மிகச் சிறப்பான விழா எடுத்து வழிபாடு செய்கின்றனர்.
அந்த ஆண்டு விழா நாளன்று, அருகில் உள்ளோருக்கெல்லாம் இலவச அன்னதானம் இங்கு வழங்கப் படுகின்றது.

ஆலமரக் குகாஸ்ரமம் மலை மேல் அமைந்துள்ளதால், போதுமான வழி இன்றி, ஒற்றையடிப் பாதையில், எல்லாப் பொருட்களையும் அன்பர்களின் உதவியுடன் கொண்டு சென்று, இந்த விழாவினை, மிகுந்த சிரமத்துடன் அதே சமயத்தில், மிக்க சிரத்தையுடன், இந்த அன்பர்கள் வருடா வருடம் நடத்தி வருகின்றனர்.
நடப்பு 2009ம் ஆண்டு நடைபெற்ற விழாவில், காலையில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் அடங்கிய அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் செய்து, இந்த விழா துவங்கி வைக்க வேண்டும் என்று அந்த அன்பர்கள் விரும்பினர். விழாவிற்கு, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் தலைவர் திரு டி.ஆர். ஜவஹர்லால் தலைமை தாங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதன் பேரில் அவரும், இவ் விழாவில் பங்கு கொண்டு, சிறப்பித்தார்.

அவருடன் மதுரையைச் சேர்ந்த திரு ஹரிகோவிந்தன், ஏ.ராமானுஜம், திரு அருட்பா ரெங்கநாதன், திரு தாயுமானவன், மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அந்த குகாஸ்ரம அறக்கட்டளைக் கட்டிடத்தில், மனித உடலில் விளங்கும் சக்தி பற்றிய அரிய படம்
தொங்க விடப்பட்டிருந்தது. அது கீழே அன்பர்களின் தகவலுக்காகத் தரப்பட்டுள்ளது. 