சிவகங்கை முத்துப்பட்டியில் சன்மார்க்க சங்கம்.
Ramanujam
posted 30 months ago
10 Jul 2009 06:48:48 GMT 6:48:48 AM
1625 views
சிவகங்கை மாவட்டம் - முத்துப் பட்டி கிராமத்தில் சன்மார்க்க சங்கம்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முத்துப்பட்டி கிராமம் ஆகும்.
அந்த கிராமத்தில், தனது சொந்த நிலத்தில் திரு பிச்சை ஐயா என்பவர், திரு அருட்பிரகாச வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கைகளைப் பரப்புவதற்கும், அன்னதானப் பணிகளுக்கும் என்று ஒரு கட்டிடத்தைக் கட்டியுள்ளார்.
அவரது வயது 68 ஆகும். அவர் மனைவி மற்றும் ஆகியோர் இந்த சங்கக் கட்டிடத்தில் இருந்து கொண்டு தினமும் 12 மணி அளவில்,. தம்மால் இயன்ற அளவு, ஜீவகாருண்யப் பணியான பசி போக்கும் பணியை நிறைவேறி வருகின்றனர்.
உள்ளூர்ப் பொதுமக்களின் ஆதரவுடன், இந்த பணியை அவர் ஆற்றி வருகின்றார்.
அக் கட்டிடத்தின் அருகே, சிவகங்கையில் ஜீவ சமாதி அடைந்த மெளன குருவின் சமாதியும் அமைந்துள்ளது.

வள்ளல் பெருமானின் கொள்கைகளைப் பின்பற்றி, சிவகங்கை மாவட்டத்தில் இவர் ஜீவகாருண்யப் பணிகளைத் தனது சொந்த நிலத்திலேயே நிறைவேற்றி வருவது மிகவும் சிறப்பு ஆகும்.
மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் ரோட்டின் மேலேயே இந்த அன்னதான தருமச்சாலை அமைந்துள்ளது.