அருள் ஜோதி மாலை
பொதிகைத் தொலைக் காட்சியில் (T.V) யில் வள்ளலாரின் திரு அருட்பா சிந்தனை
நாள் 24.6.2009 புதன் கிழமை.
நேரம் : 6.45 a.m.(IST)
இன்று (24.6.2009-புதன்கிழமை) இந்திய நேரப்படி காலை 6.45 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் அருள் ஜோதி மாலை என்ற தலைப்பில் இராமலிங்க அடிகளார் பாடிய திரு அருட்பாவிலிருந்து கீழ்க்கண்ட பாடல்கள் பாடப்பட்டன.
தெய்வ நிலையங்கள் வெளியீடு
ஆறாம் திருமுறை
தலைப்பு 6. ஆற்றாமை
கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் கலகர்தம் உறவினிற் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியற் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
தலைப்பு 8. மாயை வலிக்கழுங்கல்.
தூங்கு கின்றதே சுகம் என அறிந்தேன்
சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள் என வலித்தேன்
வஞ்ச நெஞ்சினல் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
முதல் திருமுறை
திருவருண் முறையீடு.
கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர்
கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர்
அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன்
இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்ஙன் இறையவனே.
சன்மார்க்கப் பெரியவர், டாக்டர் சத்தியசீலன் அவர்கள் பாடலுக்கு விளக்கம் தந்தார்கள்.
மழையூர் சதாசிவம் அவர்கள் மேற்குறித்த 3 திரு அருட்பா பாடல்களையும் உருக்கமாக பாடினார்கள்.
பிரதி வாரமும் புதன்கிழமை காலை 6.45 மணிக்கு, இந்த நிகழ்ச்சி. பொதிகைத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் படுகின்றதாக, தொலைக்காட்சி அலுவலகத்தில் தெரிவித்தனர்.
சன்மார்க்க அன்பர்கள், இந் நிகழ்ச்சியினைக் கண்டு பயன் பெறுவதற்காக இச் செய்தி, இங்கு வெளியிடப்படுகின்றது.
Write a comment