DAEIOU - தயவு
21-6-2009 திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளை 2-ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்.

21.6.2009-திண்டுக்கல்லில் அருட்பெருஞ்ஜோதி-தயவு அறக்கட்டளையின் 2ஆம் ஆண்டு நிகழ்ச்சி.

காலையில் சன்மார்க்க அன்பர்களால் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது.

திரு S.S.கிருஷ்ணமூர்த்தி ஐயாவிற்குப் பதிலாக திரு N.V.G.B. ராஜாராம் மூத்த சன்மார்க்கப் பெரியவர் அவர்கள் தலைமை ஏற்றார்.

அவரே சிறப்புச் சொற்பொழிவினையும் நிகழ்த்தினார்.

பின்னர் அணுக்கத் தொண்டர் திரு விஸ்வநாதன், இவ் விரண்டாம் ஆண்டு விழாவின் சிறப்புக் குறித்து

கீழ்க்கண்டவாறு பேசினார்.

அருட்பெருஞ்ஜோதி தயவுக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி தயவாலயம் அருட்பெருஞ்ஜோதி தயவு அறக் கட்டளை இவையெல்லாம் சாதாரணமான விஷயங்களே அல்ல.

அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றலும் தயாநிதியின் பேராற்றலும் இணைந்து இங்கே காரியப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அருட்பெருஞ்ஜோதி தயவு அறக் கட்டளை புறத்திலே எங்குமில்லை. நம் ஒவ்வொருவருடைய தலை நடு இடத்திலும் சத்திய ஞான தீபமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

இந்த 2ஆம் ஆண்டு விழா என்பது வள்ளல் பெருமான் சொல்லியது போல "எவ்வுயிர்க்கும் எவ்விடத்தும் இலங்கு சிவமொன்றே என்னாணை என் மகனே இரண்டில்லை ஆங்கே அருள் சேர்த்து இரண்டென அறிக." என்றது போல எங்கும் நிறைந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் தனிப்பெருங் கருணையோடு விளங்குகிறார். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை சேர்ந்த 2ம் ஆண்டு விழாவாக இது அமைகிறது.

இவ் விழாவில் மாலை நிகழ்ச்சிகளாக பள்ளிக் குழந்தைகளுக்குப் போட்டி வைத்துப் பற்பல பரிசுகள் வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும், மற்றும் ஏழை எளியோருக்கும் விழா முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.