<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

Arulmigu Thirumarainadha Swami Temple at Thiruvadhavur.

Ramanujam
posted 31 months ago
19 Jun 2009 06:46:44 GMT 6:46:44 AM

1421 views

Arulmigu Thirumarainadha Swami Temple, Thiruvadhavur, Madurai District.


          At Thiruvadhavur, the birth place of Saint Manickavasagar, there is a temple named Arulmigu Thirumarainadha Swami Temple. The name of the Goddess is Shrimathi Vedayaki amman.


There is a shrine exclusively put up for Saint Manickavasagar.


This is an ancient temple to be seen by one and all.


   


 


    


 


                      


 


        


 

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment
#1
Daeiou Ramanujam iya'
temple photo graph very nice, i performed temple gopuram dharsan within our drawing hall,
Gopuram dharsan kodi punnium.so, i offered 50 laks punnium to you iya.
by
Daeiou Prabaharan, coimbatore.
prabhakaranNachimuthu

25 Jun 2009 05:08:23 GMT 5:08:23 AM
31 months ago
#2
திருமறைநாத சுவாமியாக இருந்து திருமுகம் காட்டிய இறைவனுக்கும்,

இமைப் பொழுதும் தன் நெஞ்சில் நீங்காதான் தாளினை வழுத்திய

மாணிக்கவாசகப் பெருமானுக்கும், அவரை ஈன்ற திருவாதவூருக்கும்,

அந்தக் கோவில்களை இந்த இணைய தளத்தின் மூலம் வெளி உலகம்

அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்த www.vallalarspace.com

website-க்கும் இந்த புண்ணியம் உரித்தாகுக.

தயவுக் குழு, மதுரை.

Ramanujam

25 Jun 2009 10:29:05 GMT 10:29:05 AM
31 months ago
#3
Sir,
This article is very useful to Religious People not for us. This kind of Work may kindly be avoided in future in this site which is established especially for VALLALAR.
I posted here one great Sanmargee namely Mr. Karthikeyan's article whish was posted in vallalar.net for your information.Kindly read his other article also.

சமய சன்மார்க்கம்

Author :Karthikeyan

சமய சன்மார்க்கம் வள்ளலாரின் உபதேச குறிப்புக்கள் : 1. சமய சன்மார்க்கம் 2. மத சன்மார்க்கம் 3. சுத்த சன்மார்க்கம்
சுத்த சன்மார்க்கத்தில் சாதகர்கள் , சாத்தியர்கள் என்று இரண்டு வகை காட்டுகின்றார். இவற்றை பற்றி வள்ளலார் கூறும் விளக்கம் :

சமய சன்மார்க்கம் :

இயற்க்கை உண்மை ஏக தேசமான சத்துவ குணத்தின் சம்பந்தம் உடைய மார்க்கமே சமய சன்மார்க்கம் . 1. கொல்லாமை 2. பொறுமை 3. சாந்தம் 4. அடக்கம் 5. இந்திரிய நிக்கிரகம் 6. ஜீவ காருண்யம்

ஆகிய ஆறும் தான் சமய சன்மார்க்கத்தின் இயல்பாகும் . இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம் . இவ்வண்ணம் வாசியானுபவம் பெற்று , சொருப அனுபாவம் ஆகிய சாதனமே சமய சன்மார்க்கம்

வள்ளலார் கூறும் சமய சன்மார்க்கம் எது என்பதை ஒரு முறை மேலே படித்து கொள்ள வேண்டும் .

சுத்த சன்மார்க்கிகள் என்று சொல்லி கொள்பவர்கள் மற்ற சமய தெய்வங்களை வழிபாடு செய்வோரையும் ,தீரு நீறு , நாமம் முதலிய சமய சின்னங்களை விடாமல் அணிந்து கொள்வோரையும்,சமய சன்மார்க்கிகள் என்று கூறுவதோடு மட்டும் நில்லாமல் ,எந்த சமய தேவரையும் வழிபடாது , வள்ளலார் உருவ சிலையையோ அல்லது அவரது படத்தையோ மட்டும் வணங்க்வோரை கூட சமய சன்மார்க்கிகள் என்று கூறுகிறார்கள்.

மத சன்மார்க்கம் தொடரும் ...., REFERENCE : வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம(மு. பாலசுப்பிரமணியன்)

சமய தேவரை வழிபாடு செய்பவர்கள் சன்மார்க்க சங்கத்தை சார்ந்து விட்டால் மட்டும் ,வடலூர் வருவதால் மட்டும் , சன்மார்க்கிகள் ஆகவோ அல்லது சமய சன்மார்க்கிகள் ஆகவோ முடியாது. அவர்கள் சமயம் சார்ந்தவர்களே .ஏனெனில் , சமயங்களில் கூறபட்டுள்ள தெய்வங்கள் கற்பனையே என்கிற விவரம் அறியாமலும் , அவற்றை இன்னமும் நம்புவதாலும் , அவற்றை வழிபாடு செய்யாது விட்டால் தம்மை என்ன செய்து விடுமோ , என்ற பயத்தாலும் அவற்றை விடாது வைத்து கொண்டு இருக்கிறார்கள் .

பத்தோடு பதினொன்று என்பது போல் , அவற்றோடு வள்ளலாரையும் வைத்து இருப்பார்கள் . அவர்களை சமய சன்மார்க்கிகள் என்பது சரியானது அல்ல . வள்ளலார் கூற்றுபடி சரியான திருவருள் விளளக்கம் பெறாதவர்களே ஆவார் .

4726. தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும் சேர்கதி பலபல செப்புகின்றாரும் பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய்ச் சம யாதியை மெச்சுகின்றாரும் மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார் மேல் விளைவறிகிலர் வீண் கழிக்கின்றார் எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந்

வள்ளலாரின் அளவு கோலின் படி , மேற குறித்தவர்களை அதாவது பலபல தெய்வங்களை சிந்திபோரும் , கதிகள் பலபல உண்டு என்போரும் ,பொய்யாக சொல்லப்பட்டுள்ள கதைகளையும் ,புராணங்களையும் நடந்த வரலாறு போல புகன்றிடுவாரும் , பொய்யான சமயங்களை போற்றுகின்றோரும் ,இறைவழி வந்த உண்மையான திருவருள் விளக்கம் பெறாத,உண்மை அறிவு விளக்கம் பெற வேண்டிய கூட்டத்தில் சேர்க்க பட வேண்டுமே யொழியே,எக்காரணம் கொண்டும் அவர்கள் சமய சன்மார்க்கிகள் அல்லர் . தெய்வ வழிபாடை வைத்து சமய சன்மார்க்கி என்று கூறாது

கொல்லாமை , பொறுமை, சாந்தம் , அடக்கம் , இந்திரிய நிக்கிரகம் , ஜீவ காருண்யம் ஆகிய ஆறு குணங்களையும் யார் சொருப அனுபவமாக பெறுகின்றார்களோ அவர்களை மட்டும் சமய சன்மார்க்கிகள் " என்று வள்ளலார் கூறுவதை உற்று நோக்கி , இனியாவது யாரை "சமய சன்மார்க்கிகள் என்று கூற வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்

CONCLUSION : கொல்லாமை ,பொறுமை,சாந்தம் , அடக்கம், இந்திரிய நிக்கிரகம் ,ஜீவ காருண்யம் ஆகிய ஆறு குணங்களையும் யார் சொருப அனுபவமாக பெறுகின்றார்களோ அவர்களை மட்டும் சமய சன்மார்க்கிகள் " என்று வள்ளலார் கூறுகிரார் .

இதில் எந்த குணத்தையும் எண்ணி பார்க்காத நாம், வள்ளலார் சிலையை வைத்து வழிபடாததாலும், பிரசாதம் வைகாததாலும், தீப ஆராதனை செய்யாததாலும் , மட்டுமே சுத்த சன்மார்க்கிகள் ஆகிவிட முடியுமா ? என்று அமர்ந்து பொறுமையாக சிந்தித்தால் , நாமில் யாருமே "சமய சன்மார்க்கிகள் " சொல்லி கொள்ள லாயக்கு அற்றவர்கள் என்று வேறு யாரும் கூற வேண்டாம். நம்முடைய மனம் நன்கு கூறும் .
a.sengaan

04 Dec 2009 22:16:51 GMT 10:16:51 PM
26 months ago
#4
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு,
வந்தனம். கோபுரத்தின் அக பொருள் சிறப்பை ஆண்டவர் மூலம் விளக்குகிறேன்.
கோபுரம் என்பது உண்மையில் சமய தொடர்பானது இல்லை.அதன் அக பொருளை அறிந்தால் அக உண்மை தயவினால் வெளிப்படும்.கோபுரம் விளக்கம் யாதனில் கோபுரத்தின் பகுதிகள் நம் ஒன்பது புலன்களை
பற்றி சொல்லுகிறது.அதனை தயவினால் ஒவ்வொன்றாக விசாரித்து அறிவதன் மூலம் விளக்கம் பெறலாம்.
கோபுரம் சமய தொடர்பில் கோபுரத்தை அறிந்து வைத்து இருப்பதால் அப்படி எண்ணி கொள்கிறோம்.எதையும் புறத்தில் பார்ப்பதோடு
நிறுத்தி விடுவதால் அக பொருள் தெரிய வில்லை.உண்மை யாதனில் சன்மார்கத்தை அறியாதவர்கள் புற கோவிலில் உள்ள கோபுரத்தை பார்ப்பதை விட அங்குள்ள உருவ சிலைகளை பார்கிறார்கள்.கோபுர பொருளை ஒருநாள் சன்மார்கத்தை அறியாதவர்கள் உணர்வார்கள் என்பதற்காக தான் பெரு தெய்வ கோவில்களுக்கு செல்வதை தடுக்க வில்லை.அவர்களுக்காக தான் சிறு தெய்வ வழிபாடு கூடாது என வள்ளலார் தனியாக சொல்லி உள்ளார்.அவர்கள் சன்மார்கதுகு வந்த பிறகு உருவ தொழுகையை விடுவது அருமை.சன்மார்க்கிகள் புற கோவிலின் கோபுர பொருளை உணர்வார்கள். வள்ளலார் காண வேண்டாமோ இரு கண் இருக்கும் போதே விண் உயர் கோபுரம் காண வேண்டாமா என்கிறார்.இதன் அக பொருளை தயவினால் மட்டும் பெற முடியும்.
கேட்டு அறியாத கேள்விகள் கேற்கும் காலம் இது.எனவே,உண்மை வெளிபடுவது உறுதி.எங்களை போன்ற இளம் தலைமுறை மக்கள் வளர்ச்சி பெற்று விட்டோம்.சன்மார்கத்தை அறியாதவர்கள் விரைவில் சன்மார்கத்தை அறிவார்கள்.எனவே வளர்ந்து வர போகும் சமூகமும் கோபுரத்தை அக பொருளாக காண்பார்கள்.சன்மார்க்கம் சமயம் கடந்தது தான்.சமயத்தில் சன்மார்க்கத்தின் சில உண்மைகள் இருப்பதால் அதனை சமய பொருளாக காண வேண்டாம்.சரவனந்தா சுவாமிகளின் தயவு புத்தகத்தை படித்து தெளிவோம்.
அவர் வள்ளலார் போல உயர் நிலையை அடைந்தவரா என்று கேற்காமல் அவர் புத்தகத்தை படிப்போம்.
அவரும் ஞான சித்தி பெற்றவர் தான்.யார் அக பொருளை சொன்னாலும் அறிந்து உண்மையை உணர்வோம்.
அதுவே சன்மார்கிகளுக்கு அழகு.காரண காரியத்தோடு தான் சன்மார்கிகள் நம் சமய சின்னமாக நினைப்பதை புறத்தில் போடுவார்கள்.ஏதும் தவறா இருந்தால் மனிக்கவும்.இது வள்ளலார் கருத்து.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி.
P Sujatha Rajashree

05 Dec 2009 22:30:41 GMT 10:30:41 PM
26 months ago
#5
Sir,
Can you post the elucidation of Swami Saravanda for Agaval Songs Nos.659,660 , 965 ,966
and 1553,1554 from His Part II Book.

Detailed explanation is given for all including for the above.
a.sengaan

06 Dec 2009 07:50:10 GMT 7:50:10 AM
26 months ago

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
திருவருளால் பார்க்க நேர்ந்த இடங்கள்

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace