DAEIOU - தயவு
வள்ளலார் வழியில் ஆன்ம நேயமிக்க காவல் துறை உயர் அலுவலர்கள்.

வள்ளலார் வழியில் ஆன்ம நேயமிக்க காவல் துறை உயர் அலுவலர்கள்.

1. திரு ஆர். ஆறுமுகம், I.P.S. சிலை திருட்டுத் தடுப்பு D.I.G, அண்ணா நகர், சென்னை.

கடந்த டிசம்பர் மாதம், சென்னையில் வடக்கு உஸ்மான் ரோடில் திரு அருட்பா இசை விழா 3 நாட்கள் நடைபெற்றது. 16.12.2008 முதல் 18.12.2008 வரை மிகவும் அருமையான தொரு இந் நிகழ்ச்சியினை, திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்கள் ஏற்பாடு செய்து நடத்திக் காட்டினார். இது, சென்னையில் அவர் நடத்திய நான்காவது ஆண்டாவது திரு அருட்பா இசை விழாவாகும். தினந்தோறும் மாலை நேரத்தில் துவங்கும் இந்த இசை விழா இரவு 9.00 மணி வரை நடைபெறும்.
இந்த இசை விழாவில், சிறப்புப் பேச்சாளராக, திரு ஆர். ஆறுமுகம், I.P.S., அவர்கள் அழைக்கப்படிருந்தார். அவர், வள்ளலாரின் திரு அருட்பா இசை விழா என்கின்றீர்கள். எங்கே அன்னதானப் பணி செய்கின்றீர்கள் ? பசி போக்கும் ஜீவகாருண்யப் பணியினை இந்த இடத்தில் எங்கு செய்கின்றீர்கள் எனக் கேட்டார். விழாவினை நடத்தியவர்கள், மாலை நேரம் விழா துவங்குவதால், அன்னதான ஏற்பாடுகள் ஏதும் செய்யவில்லை என்றனர்.
வள்ளலாருக்கு ஒரு விழா எடுக்கும் நிகழ்ச்சியில் எவ்வாறு, ஜீவகாருண்யம் இல்லாதிருக்கலாம் ? எத்தனையோ தனவந்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கின்றீர்களே .. யாராவது அப் பணியினை ஏற்றுக் கொள்ளக் கூடாதா ? எனக் கேட்டார்.

அவர் சொன்னது தான் தாமதம். வழக்கமாக வடலூரில் திரு அருட்பா இசை விழாவின்போது 3 நாட்கள் அன்னதானப் பணி மேற்கொள்ளும் நெய்வேலி திரு ராதாகிருஷ்ணன் அய்யா அவர்கள் மேடைக்கு வந்தார்.

இனிமேல் அந்தப் பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அம் மேடையிலேயே அறிவித்தார். சென்னையில் இசை விழா நடைபெறும் 3 நாட்களிலும், அன்னதானம் வழங்கும் பணியினை இனிமேல் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என அறிவித்ததும், அனைத்து அன்பர்களும் அவரது அறிவிப்பினை வரவேற்றனர். குறிப்பாக, இதற்கு ஏற்பாடு செய்த D.I.G அவர்களை அனைவரும் பாராட்டினர்.

இவ்விதமாக, காவல் துறையில் பணியாற்றும் ஒரு உயர் அலுவலர், வள்ளலாரின் நெறியினை வள்ளலாரின் திரு அருட்பா இசை விழா நடத்தும் இடத்திற்கே வந்து அனைவருக்கும் உணர்த்தினார்.

இந்த ஆண்டு, வடலூரில் இசை விழா 3 நாட்கள் நடைபெற்றது. திருபுவனம் ஜி. ஆத்மநாதன், வடலூர் இசைவிழா காரியதரிசி திரு மற்றும் மதுரை ராமானுஜம் ஆகியோருடன் அவரது அலுவலகத்திற்குச் சென்று, இசை விழாப் பத்திரிக்கையினை கொடுத்து விழாவில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டனர். .


வடலூரில் நடைபெறும் இசை விழாவிற்கு நான் வருவது பெரிதல்ல. வள்ளலாரின் நெறியினைக் கடைப்பிடிக்கும் அனைவரும் மிகவும் நல்லவர்க\ளாக இருப்பார்கள்.

நான் வந்தால், உங்களுக்கு என்னால் ஆன காரியம் அங்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றார். (பல்வேறு பணிகளால் அவர் வடலூர் இசை விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை)

ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் மேம்பட்டு, வள்ளலார் நெறியில் நடக்கும் அவரது நோக்கத்தைக் கேட்டு, சென்றிருந்த அன்பர்கள் அயர்ந்து விட்டனர்.

(2) பழனி தாலுகா கீரனூரில் திண்டுக்கல் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு பாரி, I.P.S. அவர்களின் பேச்சு. நாள் 7.6.2009.

இந்த சன்மார்க்க குருகுலத்திற்கு நான் இப்போதுதான் முதல் முறையாக வருகின்றேன். ஆதரவற்றோருக்காக திரு குலபதி குப்புசாமி ஐயாவால் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த குருகுலத்திற்கு வந்தது மனதிற்கு மிகவும் இதமான விஷயமாக உள்ளது. இந்த குருகுலத்துக்கு, நான் முன்பே வந்திருக்க வேண்டும். .

எனக்கு வள்ளற் பெருமானின் திரு அருட்பா மிகவும் பிடித்தமான புத்தகமாகும். அவரது ஜீவ காருண்ய ஒழுக்கம், மனித நேயம் என்னை மிகவும் கவர்ந்தது.

திங்கள் தோறும் திண்டுக்கல்லில் எனது அலுவலகத்தில் காவல் துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை கேட்கும் நாள் நடைபெறும். பலர் வந்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கேட்டுக் கொள்வார்கள். எங்களது துறை சார்ந்ததாக இருந்தால் விரைவில் அதனை செய்து தரச் சொல்லி விடுவேன்.

சிலர், நெடு நேரம் தமது கோரிக்கையினைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இடையில் அவர்கள் பால் மிகவும் கோபம் வரும். இருந்தாலும், வள்ளலாரின் கோட்பாடுகளின் படி, பொறுமை காத்து அவர்களது கோரிக்கையினை மிகவும் பரிவுடன் கேட்பேன். அனைத்தையும் கேட்டு முடிந்ததும், அவர்களிடம், இந்தக் கோரிக்கை, காவல் துறை சம்பந்தப்பட்டது இல்லை. சிவில் சம்பந்தப்பட்டது என்பேன். அதற்கு அவர்கள் சொல்லும் பதில் - . அது எனக்குத் தெரியும் ஐயா.-- ஐயாவிடம் எந்தப் பிரச்னையாலும் சொல்லிவிட்டால் முடிந்து விடும் என்றதால்தான் ..இங்கு வந்து மனுக் கொடுக்கிறேன் என்பார்கள். அவர்கள் இந்தக் காவல் துறையின்பால் கொண்டிருக்கும் நம்பிக்கையை என்னென்று சொல்வது..

அதற்காகவே கேட்டுக் கொண்டிருப்பேன். என்றார்.

(3) திரு சைலேந்திரபாபு, I.P.S.

இவர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1992 ஆம் ஆண்டில் காவல் துறைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இவர் தனது பணிக் காலத்தில், பழனி தாலுகா கீரனூரில் இயங்கிவரும் சன்மார்க்க குருகுலத்தைப் பார்வையிட்டுள்ளார்.

சன்மார்க்க குருகுலம் விஜயம் செய்தேன். திரு குப்புசாமி அவர்கள், ஏழைக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக தன்னை அற்பணித்ததைத் தெரிந்து கொண்டு பெருமைப் பட்டேன். இன்றைய சமுதாய சூழ்நிலையில் ஐயா அவர்களின் சன்மார்க்க பிரார்த்தனை (எல்லா மதங்களும் அடங்கிய) மிகவும் போற்றப்பட வேண்டியது.

இந்த வசதியற்ற குழந்தைகளில் யாரேனும் I.A.S / I.P.S. பரீட்சை எழுதுவதாக இருந்தால் அதற்கான எல்லாச் செலவையும் நான் செய்கிறேன் என்று நான் உறுதி அளிக்கிறேன். (பார்வையாளர் பதிவேட்டில், இதனை அவரே தம் கைப்பட எழுதி ஒப்பம் இட்டுள்ளார்.

கண்டிப்புடன் நடந்து கொள்ளும் காவல்துறை அதிகாரிகளின் மனத்தில் வள்ளல் பெருமான் புகுந்து கொண்டதால், மிகுந்த மனித நேயத்துடன் அவர்கள் நடந்து கொள்வதைத்தான் மேற்காணும் நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.


P Sujatha
Karunaimigu Friend,
Thank U For Information.கருணைமிகு நண்பரே.
வணக்கம்.நீங்கள் கருணைமிகு ஆறுமுகம் ஐ.பி.எஸ் அவர்களை வடலூர் இசை விழாவுக்கு அழைத்த போது அவர் சொன்ன பதில் மனதை தொடும் படி இருந்தது.
திரு.ஆறுமுகம்,திரு.பாரி,திரு.பாபு இவர்களை போன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும்.அவர்களுக்கு எனது கருணைமிகு வணக்கம்.அவர்களை போன்று
நானும் சிறந்த அதிகாரியாக வர விரும்புகிறேன்.அனைத்து சன்மார்க்க அன்பர்களின்
வாழ்த்துக்களை வேண்டுகிறேன்.உங்களை போன்றோரின் நல்ல
பிராத்தனைகளினால் நலமாக வாழ்வேன்.நாளைய உலகம் சுத்த சன்மார்க்க அன்பர்களிடம் தான் இருக்கிறது.இது வள்ளலார் ஆணை.
வள்ளலார் அன்புடன்,அருள்ஜோதி சுஜாதா
Thursday, June 11, 2009 at 09:45 am by P Sujatha