பழனி வட்டம் கீரனூர் கிராமம் சன்மார்க்க குருகுலம் .. உதவும் தயவுள்ளம் டாக்டர் அருள் நாகலிங்கம்.
பழனி வட்டத்தில், கீரனூர் என்னும் டவுன் பஞ்சாயத்தில், குலபதி குப்புசாமி ஐயா அவர்கள் சன்மார்க்க குருகுலம் அமைத்து ஆதரவற்ற முதியோர், கண் பார்வை இழந்தோர், ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் காப்பகம், அவ்ர்களுக்கான பள்ளி முதலானவற்றைப் பன்னெடுங்காலத்துக்கு முன்பே நிறுவி, கடந்த 1.6.2009 முதல் 7.6.2009 வரை ஒரு விழா நடத்தினார். அங்கு ஒரு டாக்டர், சிறு குழந்தை போல் பல்வேறு பணிகளையும் பார்த்து அங்கிருந்த ஊழியர்களுடன் இணைந்து விழாவிற்கான முன்னேற்பாட்டு நிகழ்ச்சிகளைத் திறம்படச் செய்து கொண்டிருந்தார்.
http://www.vallalarfiles.com/image/LSs,$,2fiYNxHUB9UNIWAdDL,$,2bQ,$,3d,$,3d/sz-tn650/070620091136200000.jpg
விசாரித்ததில் அவர் டாக்டராக ஈரோட்டில் பணி புரிந்து வருவதாகத் தெரிந்தது. குலபதி குப்புசாமி ஐயா அவர்கள் செய்து வரும் அருள் தொண்டுகளுக்கு இவர் தோளோடு தோள் நின்று, உதவி செய்து வருகின்றார். தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு நோய் தீர்ப்பதுடன், அவர்களைச் சன்மார்க்க நெறி கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்துகின்றார். மருத்துவச் செலவுக்கு அவர்கள் தரும் தொகையினை, கீரனூர் சன்மார்க்க குருகுலத்துக்கு கொடுத்து மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றார்.
குலபதி குப்புசாமி ஐயாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சன்மார்க்க குருகுல வரலாறு முதலானவற்றைத் தொகுத்து, ஒரு புத்தக வடிவாக்கி, அன்று முதல் இன்று வரை எல்லா நிகழ்ச்சிகளையும் அதில் அடக்கி அனைவருக்கும் வினியோகம் செய்தார்.
குருகுலம் நிறுவனர் திரு குலபதி குப்புசாமி ஐயா அவர்களின் நன் மதிப்பை இவர் பெற்றுள்ளார். அவரது புகைப்படம் இங்கே பிரசுரிக்கப்படும்.
http://www.vallalarfiles.com/image/THAsR6S,$,2fnUxJX0zbWjDQoA,$,3d,$,3d/sz-tn650/060620091036020000.jpg
http://www.vallalarfiles.com/image/CY8LsFNwLbGj9J2b0pg7sQ,$,3d,$,3d/sz-tn650/060620091036040000.jpg
http://www.vallalarfiles.com/image/o,$,2bAmvZ3Hgjfh0LECANs2JA,$,3d,$,3d/sz-tn650/070620091136060000.jpg
http://www.vallalarfiles.com/image/y9nLBRMvot9HNFOFuL6jkA,$,3d,$,3d/sz-tn650/070620091136080000.jpg
http://www.vallalarfiles.com/image/FhRS4z6vM9Oaufqi,$,2bBtNsQ,$,3d,$,3d/sz-tn650/070620091136120000.jpg
அவரது புகைப்படத்தோடு டாக்டரின் பெயரையும் வெளி இடுங்கள்.சேதியை வெளி இடுவதற்கு நன்றி.வள்ளலார் அன்புடன்,அருள்ஜோதிசுஜாதா.
Doctor name Karunaimigu.ArulNagalingama.sariya kavanigala sir.sorry.
Vallalar blessings to Arul