DAEIOU - தயவு
பொதிகை T.V.யில் புதன் கிழமை தோறும் காலை 6.45 மணிக்கு திரு அருட்பா உரை நிகழ்ச்சி.

பொதிகை T.V.யில் புதன் கிழமை தோறும் காலை 6.45 மணிக்கு திரு அருட்பா உரை நிகழ்ச்சி.
கடந்த 19.5.2009 அன்று, வடலூரில் இருந்து திரு அருட்பா இசை விழாவின் பொதுச் செயலாளர் வாசவி B. ஜோதி, இசை அமைப்பாளரும் திரு அருட்பா பாடகருமான திருபுவனம் ஜி. ஆத்மநாதன், மதுரை வள்ளலார் ஆர்க் பவுண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம் ஆகியோர் சென்னை பொதிகை தொலைக்காட்சி அலுவலர்களைச் சந்தித்து, வரவிருக்கும் 24வது திரு அருட்பா இசை விழா நிகச்சிக்கான அழைப்பிதழைக் கொடுத்து, அவ் விழாவில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டனர்.
திரு அருட்பா விளக்க உரை நிகழ்ச்சியினை, பொதிகைத் தொலைக்காட்சி புதன் கிழமை தோறும் காலை 6.45 மணிக்கு ஒளிபரப்பி வருகின்றது அதில் டாக்டர் சத்திய சீலன் அவர்கள் சன்மார்க்க விளக்க உரை அளிப்பதையும், மழையூர் சதாசிவம் பாட்டுக் கச்சேரியும் காண்பிக்கப்படுகின்றது, என்ற செய்தியை அங்கிருந்த அலுவலர்கள் அப்போது தெரிவித்தனர்.
இதற்கு ஏற்பாடு செய்த வடலூர் பொதிகைத் தொலைக்காட்சி நிறுவனத்தை, அவர்கள் பாராட்டினர்.
வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நிகழ்ச்சிகளை, அனைத்து சன்மார்க்க அன்பர்களும் மற்றும் யாவரும், வாரத்தில் புதன் கிழமை தோறும் காலை 6.45 மணி அளவில் பொதிகைத் தொலைக்காட்சியில் கண்டு அந் நெறியினைப் பின்பற்றி நடக்கும்படி அவர்கள் அனைவரும் வேண்டுகின்றனர்.