DAEIOU - தயவு
24.5.2009 பொதிகை T.V.யில் 23வது (வடலூர்) திருஅருட்பா இசை விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு.

23வது திரு அருட்பா இசை விழா நிகழ்ச்சிகள், வடலூர்

பொதிகை T.V.யில் 24.5.2009 (ஞாயிறு) மதியம் ஒளிபரப்பு.

கடந்த 19.5.2009 அன்று வடலூர் திரு அருட்பா இசைச் சங்கத்தின் செயலாளர் வாசவி திரு பி. ஜோதி, திருஅருட்பா பாடகர், திருபுவனம் ஜி. ஆத்மநாதன், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டீ திரு ஏ.ராமானுஜம் ஆகியோர், சென்னையில் தூர்தர்ஷன் கேந்திர அலுவலர்களை சந்தித்து வரும் 25.5.2009 முதல் 27.5.2009 வரை வடலூரில் நடைபெற இருக்கும் 24வது திரு அருட்பா இசை விழா குறித்து பத்திரிகை கொடுக்கவும், அந் நிலைய அலுவலர்களை வடலூரில் இந் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் செய்யும்படி வேண்டினர்.

அதற்கு முன்னோடியாக, கடந்த ஆண்டு, வடலூரில் நடைபெற்ற 23-வது திரு அருட்பா இசை விழாவில் எடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை, பொதிகை தொலைக் காட்சியில் போடுவது குறித்தும் அந்த அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையினன ஏற்று, கடந்த வருடம் நடைபெற்ற இசை விழா நிகழ்ச்சிகள், 24.5.2009 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மதியம் 12.05 முதல் 12.30 வரை அந் நிகழ்ச்சிகளை, ஒளிபரப்புவதற்கு, பொதிகை தொலைக் காட்சி நிலையத்தினர், அவர்களிடம் ஒப்புக் கொண்டனர்.

எனவே, இந்த செய்தியினை இந்த இணைய தளத்தில் பார்க்கும் அன்பர்கள், தாமும் 24.5.2009 அன்று மதியம் 12.05 முதல் 12.30 வரை திரு அருட்பா இசை நிகழ்ச்சியினை, தாம், தமது சுற்றத்தார், தாம் சார்ந்துள்ள சன்மார்க்க சங்கத்தார் ஆகியோருடன் பார்த்து மகிழும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.