ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்…..
சுமார் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கும் .. .. .. ஒரு நாள்…
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்த கிராமமான ஆத்தாங்கரைக்கு ஜோதிமுருகன் அய்யா வரச் சொல்லி இருந்தார். அங்கு அவர், ராமநாதபுரம் ராஜாவுக்குச் சொந்தமான ஒரு பழைய காலத்துக் கட்டிடத்தைப் பிடித்து அதில் சத்திய ஞான சபை போன்ற அமைப்பினை ஏற்படுத்தி, நித்திய தீபத்தை ஏற்றி வைத்து, மாணாக்கர்களைப் படிக்க வைத்தார். அனாதரவாக வரும் வயோதிகர்களைத் தங்க வைத்திருந்தார்.
நெடு நேரம்,பல விஷயங்கள் குறித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு எதேச்சையாக வெராண்டா பக்கம் பார்வையைச் செலுத்தியபோது ஒரு பக்கத்தில் புடலங்காய் போன்ற அமைப்பில் ஒரு வஸ்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் அருகில் ஒரு குழிவான கல்லில் பால் ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது. சற்று நேரம் கழித்துப் பார்த்த போது, அந்த வஸ்து, மிகவும் மெதுவாக நகர்ந்தது. கூர்ந்து கவனித்த போது சிறிய (பன்னிப்) புடலங்காய் போன்றிருந்தது.
அய்யாவிடம் அது என்ன என்று கேட்ட போது, அது ஒரு வயதான பாம்பு. அதற்குப் பால் ஊற்றி வைத்து விட்டால் அந்த நேரத்துக்கு வந்து குடித்து விட்டுச் சென்று விடும். யாரையும் அது தொந்தரவு செய்வதில்லை. தான் உண்டு. தன் உணவு உண்டு என்றிருக்கும் எனச் சொன்னார்.
ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தால், அவர் சொன்னது உண்மை எனத் தெரிந்தது. வயதான பாம்பானால் ஓட முடியாது போலும். அந்த நிலையில்தான் அந்தப் பாம்பு அங்கு தரையில் கிடந்தது. மிகவும் மெதுவாக நகர்ந்து வந்து பால் குடித்தது.
இது எங்கே வசிக்கிறது. என்று கேட்டபோது.. .. .. அவர் சொன்னார். ஆத்தாங்கரை ஞான சபைக் கட்டிடத்தின் சுற்றுச் சுவர்கள், கோட்டை மதில் சுவர்கள் போன்ற அமைப்புள்ளவை. அந்த மதில் சுவருக்கு அருகில், ஒரு கருவேல மரத்தைக் காட்டினார். அங்குதான் வசிக்கிறது. நேரத்துக்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்று விடும். பாம்புக்கும் பால் வார்க்கும் குணம் அவரிடம் இருந்தது.
அப்புறம் .. .. .. அவர் ஒவ்வொன்றாகக் காட்டிக் கொண்டே சென்றார்.
முதன் முதலில் அந்தக் கட்டிடம், மிகவும் சிதிலமடைந்திருந்துள்ளது.
ஏதோ ஒரு நாள், அந்தக் கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஒரு முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேஷத்திற்கு அவர் சென்றபோது, இந்தக் கட்டிடம் அவர் கண்ணில் தட்டுப் பட்டுள்ளது.
நடந்து செல்ல முடியாத அளவில், சுற்றிலும், புதர்கள் மண்டிக் கிடந்துள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாக அது இருந்துள்ளது.
அதனை, தமது வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்டில் பயிலும் மாணவர்களைக் கொண்டு, முழுவதும் சுத்தப் படுத்தி, அயராது பாடுபட்டு, அக் கட்டிடத்தில் கழிப்பறை, குளியல் அறை முதலானவை எல்லாம் கட்டி, அங்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் விளங்கும் ஞான சபையினை ஏற்றி வைத்தார். அங்கு மூன்று நான்கு வாழ்வியல் பயிற்சி முகாம்களை அவர் நடத்தி வந்தார். அதிலிருந்து அந்த ஊர் சன்மார்க்க அன்பர்களுக்கெல்லாம் பரிச்சயமாகி விட்டது.
ஓரறிவுத் தாவரங்களான பயிர்ச் செடிகள், தென்னை மரங்கள் முதலானவற்றை அங்கு சுற்றிலும் வளர்த்தார்.
ஈரறிவு சங்கு, சிப்பி எல்லாம் அங்கு விளையாடும். அருகில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடற்கரை அமைந்திருந்ததால், அவை எல்லாம், மிகச் சர்வ சாதாரணமான முறையில் அங்கு வந்து செல்லும்.
மூன்றாவது அறிவு படைத்த புழு பூச்சிகள் அங்கு அனேகம் வசித்தன.
நான்கு அறிவு படைத்த கிளி, மயில் முதலானவை அங்கு வளர்ந்திருந்த மரங்களில் வசித்தன. நேரா நேரத்திற்கு அவற்றிற்கெல்லாம், உணவு அளிப்பதிலும் அவர் தவறியதில்லை.
அந்த ஊர் மக்கள், இவரது அயராத சேவையைப் பார்த்து, இரண்டு பால் கறக்கும் மாடுகளை இலவசமாகத் தந்தனர். அவை ஐந்தறிவினங்கள். அவற்றையும், வளர்த்தார், அவற்றிற்கு உண்ணுவதற்கு வைக்கோல் அங்கு கிடைக்காது, 24 கி.மீ. தூரத்தில் இருந்த ராமநாதபுரத்திலிருந்து அப் பிராணிக்கு வைக்கோல் வாங்கி வந்து அவற்றின் பசிப் பிணி போக்கினார். (அவர் பல்வேறு ஊர்களுக்கும் அடிக்கடி சென்று வந்ததால், அங்கு பணி புரிந்த ஊழியர்கள், ஐயா ஊருக்குச் சென்ற சமயம்..அந்தக் கால்நடைகளை விற்று விட்டனர். . . அது வேறு விஷயம். )
அனாதரவாக வரும் குழந்தைகளையும், வயோதிகர்களையும் எந்த பிரதி பிரயோஜனம் கருதாமல், தமது தொண்டு நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டார். அவர்களுக்கும் பசியாறக் கஞ்சி வார்த்தார். ஆறாவது அறிவு படைத்த மனிதர்களிடம் மிகுந்த அன்பு செலுத்தினார்.
அவர் நிறுவிய சிறுவர் இல்லத்தில்…ஒரு சிறுவன் .. .. தாயும் இல்லை .. தந்தையும் இல்லை…மிகச் சிறியவனான அவனுக்கு .. .. ..ஜோதி முருகன் அய்யா தான் தாய் தந்தை எல்லாம் .. .. .. ..அவனிடம் அவர் மிகுந்த அன்பு செலுத்தினார்.
மனித குலத்திற்குச் சேவை செய்வதற்காக, கீழ்க்காணும் 7 சேவை மையங்களை அவர் ஏற்படுத்தினார்.
ராமநாதபுரம் ..(3 மையங்கள்)
ஆத்தாங்கரை
திரு உத்திர கோச மங்கை
வடலூர்
ராமேஸ்வரம்.
தாம் வாங்கிய ஓய்வூதியம் முழுவதையுமே அவர் மூலதனமாக வைத்து அவற்றை முதலில் நடத்தினார்.
பின்னர், அவரது செயல்பாடுகளைப் பார்த்து, சில ஈர நெஞ்சங்களில் இருந்து கசிந்த..அன்பு, .. பொருளாகவும்,..பணமாகவும் அந்த மையங்களை நடத்த உதவியது…
மொத்தத்தில் சொல்லப் போனால் .. .. .. ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் .. .. என்ற வள்ளல் பெருமானின் வாசகங்களை..அவர் தமது வாழ்நாளில் செய்து காட்டி ..மெய்ப்பித்துக் காட்டினார்.
கடந்த 2007 ஜனவரி மாதம் நான்காம் வாரத்தில் அவர் மறைந்த போது, ராமநாதபுரம் நகரே .தாங்கொணாத் துயரில் .மூழ்கியது.அது மட்டுமல்ல .. .. நகரமே, ஆத்தாங்கரைக்கு நகர்ந்து சென்றது .. என்றால் அது மிகையாகாது.
தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சன்மார்க்க அன்பர்கள், …கேள்விப்பட்டுக் கேள்விப்பட்டு .. ஒரு வார காலமாக .. .. ...ஆத்தாங்கரைக்கு வந்து.. அவருக்கு அஞ்சலி செலுத்தினர். வெளிநாடு வாழ் சன்மார்க்க அன்பர்கள், தொலைபேசி வாயிலாக..அவர் குறித்து விசாரித்த வண்ணம் இருந்தனர்.
இயற்கையோடு இயற்கையாய் இயற்கை உண்மையராய் இணைந்து, ஆத்தாங்கரையில், தமது சொந்த பந்தங்களான, .. .. .. ஆருயிர்களுடன் ஆனந்த நித்திரை கொண்டு, அனகமாக, அன்பர்களின் அனைவரின் இதயக் கமலத்திலும் அவர் இன்றும் வசித்து வருகின்றார்… .. .. என்றும் வசிப்பார் .. .. ..
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளின் தயவுப் பெருநெறியினையும், தமது உள்ளத்தில் தேக்கிக் கொண்டு, கடற்கரையினை ஒட்டிய மாவட்டமான, ராமநாதபுரம் மாவட்டத்தை, உலகெலாம் .. நோக்கும்படி..சன்மார்க்கச் சாதனைகளைச் செய்தார்.
இவரது தலைமையிலும், ஆலோசனையிலும் தமிழ்நாடு முழுவதிலும் துவங்கிய சன்மார்க்க சங்கங்கள் .. பலப்பல .. ..
உள் நாட்டில் மட்டுமா ? இலங்கையில் .. சாவகச் சேரியில் (Jaffna)..சிங்கப்பூரில், மலேசியா..சுங்கப் பட்டானியில் .. ..
அவர் தனது வாழ்வில்,….முத்திரை பதிக்காத இனங்களே இல்லை .. என்பது
கண்கூடான உண்மை.
எத்தனையோ சன்மார்க்க சங்கங்கள் இருந்தும் .. .. அவர்களின் செயல்பாடு பல்வேறு விதங்களில் சிறப்புற்றிருந்தும் .. .
.
இவரைப்போல் ஆருயிர்களிடம் அன்பு காட்டிய மாமனிதர், .. ஏனோ…எங்கு தேடினும் தென்படவில்லை. ..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.. …. அவருக்கு இறவாப் பெரு நெறி அளித்து அருள்க .. .. இறைவா .. .. .. ..
KarunaiMigu Thiru.JothiMurugan Ayya has Live with Vallalar.
He is a Deathless Person.He is not death.He has live with us.(Mind,Soul).Ennai poda Studentskaluku Sanmarga JeevaKaruniya valvil Vala Thunai Saithu Kodu Irukirar.I am seeing him.(Soul&Mindla).Thank u for good informations about Thiru.JothiMurganAyya. With Vallalar Loving,
AruljothiSujatha