மதுரை பறம்புப்பட்டி சித்திவளாக நகரில் வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம்.
துவக்க விழா
நாள் 1.5.2009 (வெள்ளிக்கிழமை)
நேரம் காலை 10.00 மணி.
இன்று. 1.5.2009 காலை 10.00 மணி அளவில், மதுரை பரம்புப்பட்டி அருகே உள்ள சித்தி வளாக நகரில் அமைந்துள்ள அனைத்துலக சர்வ சமய சன்மார்க்க அற நிலையத்தில் முதல் நாள் நிகழ்ச்சிகள் துவங்கி கீழ்க்கண்ட விபரப்படி நடைபெற்றன.
தீபம் ஏற்றுதல் திருமதி புவனேஸ்வரி சொக்கலிங்கம்.
இறைவணக்கம் திருமதி சிவகாமி
வரவேற்புரை திரு முரளீதரன். அருள் ட்ரஸ்ட் நிறுவனர்,
“ஞானதீபம்” மாதாந்திர இதழ் ஆசிரியர்.
பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தவர், திரு இராமலிங்கம், அறநிலைய நிறுவனர்.
சிறப்புரை திரு ஆண்டியப்பன். காந்தியல் ராமலிங்கர் தத்துவத்துறையின் தலைவர் (H.O.D), மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை.
அருள் அறக்கட்டளையின் சார்பில் திரு APJ.அருள் எழுதிய, “கடவுள் நிலையும் ஒழுக்கமும்” (வள்ளலாரின் தனி நெறி) என்ற புத்தகமும், இன்று திரு ஆண்டியப்பன் அவர்களால் வெளியிடப்பட்டது.
வள்ளற் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க உயர் ஒழுக்க நெறியினை, அறிந்து கொள்ளும் வகையில், மேற்காணும் பயிற்சி முகாமை சிறார்களுக்காக நடத்த வேண்டியதன் அவசியத்தை இவ் விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் பாராட்டி, துவக்கி வைத்தனர்.
மேலும்,
இதில் கலந்து கொண்டு பயன்பெறும் குழந்தைகள், பிற்காலத்தில் சுத்த சன்மார்க்க நெறியில் நடப்பதற்கு, பேருதவியாக அமையும் என்றனர்.
மிகுந்த ஆர்வத்துடன் இந் நிகழ்ச்சியினை, அருள் அறக்கட்டளையின் அன்பர்கள் திரு முரளீதரன் (தலைவர்) திருமதி ராமலெட்சுமி, திரு சொக்கலிங்கம், திரு கோவர்த்தனன், செல்வி லலிதா மணி ஆகியோர் செய்தனர்.
மொத்தம் 13 மாணவ, மாணவியர் இந்த முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்த இடத்திலேயே தங்க வைக்கப்பட்டது.
Write a comment