26.4.2009 அன்று திருவண்ணாமலை ஆலமரக்குகை ஆஸ்ரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி.
கடந்த 26.4.2009 அன்று, திருவண்ணாமலை மலைமேல் அமைந்துள்ளக் குகை ஆஸ்ரமத்தில் 28வது ஆண்டு விழா நடத்தப்பட்டது.
அன்று காலையில் திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடுவதற்கென்று மதுரையிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாகக் கீழ்க்காணும் அன்பர்கள் சென்றிருந்தனர்.
- திரு T.R. ஜவஹர்லால், மதுரை
- மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன். மதுரை
- திரு சுப்ரமணியம், மதுரை
- திரு சந்திரமோஹன், ஊமச்சிகுளம், மதுரை Dt.
- திரு ஹரி கோவிந்தன், மதுரை
- திரு ரத்தின சாமி, லக்ஷ்மிபுரம், மதுரை
- திரு தாயுமானவன். மதுரை
- திரு அருட்பா ரெங்கநாதன், மதுரை.
குறிப்பிட்ட விழா நாளான 26.4.2009 அன்று காலை சுமார் 6.00 மணி அளவில், மேற்படி குகை ஆஸ்ரமத்தில், அனைவரும், அங்கு அடங்கியுள்ள மகானின் ஜீவ சமாதியில் அமைந்து மெளனமாக தியானம் செய்தனர்.
அதன் பின்னர், அகவல் பாராயண நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு, அதற்குமேலும் திரு அருட்பா பாடல்களையும் பாடினர்.
அந்த குகை ஆஸ்ரமம், செளராஷ்ட்ர சமூகத்தினரால் நடத்தப்பட்டு வந்தாலும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் பாடிவைத்த திரு அருட்பாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அன்றைய தேதியில். முதல் நிகழ்ச்சியாக, இதனைப் பாட வைத்தனர்.
திரு T.R. ஜவஹர்லால் அங்கு நடைபெற்ற செளராஷ்ட்ர சங்க நிகழ்ச்சிகளில் தலைமைப் பொறுபேற்று நடத்தித் தந்தார்.
அவர், தாம் 17வயதுமுதலே ஆன்மீகத்தால் கவரப்பட்டு, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானாரால் வழிநடத்தப் பட்டு வருவதாகத்தெரிவித்தார்.
அனைவரும் வள்ளல் பெருமான் அடைந்த நிலையினை அடையப் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மதுரையிலிருந்து வந்த அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும், மேற்படி ஆலமரக் குகை ஆஸ்ரமத்தினர் பாராட்டுத் தெரிவித்ததோடு, வரப்பெறும் ஆண்டுகளிலும், மேற்படி ஆலமரக் குகை ஆஸ்ரமத்தில் நடைபெறும் விழாக்களுக்கு, அகவல் பாராயணம் செய்து துவக்கி வைப்பதற்கு இன்னும் அதிகமான எண்ணிக்கையிலான அன்பர்கள் வர வேண்டும் என வேண்டிக் கொண்டனர். அவ்விதமே செய்வதாக, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்களும் ஒத்துக் கொண்டார்.
விழா மிகச் சிறப்பாக, நடைபெற்று பகல் 1.30 மணி அளவில் முடிவடைந்தது. சுமார் 400 அன்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு அருள் நலம் பெற்றனர்.
2 Comments
Thank u very much for Madurai sanmarga sangams thalivar T.R.Jawaharlal.vallalar wishings to T.R.JawaharlalAvl. All Madurai Vallalar sanmarga Sangams are Very Excellent Activations.
Vallalar org Foundation "The Managing trustee"A.Ramanujam sir
is doing very good service in Vallalarspace.Vallalar wishings and I am very appreciate to A.RamanujamAvl.I Know Arutpa Raganathan through by Vallalarspace.I am contact him by through cell.I am feel that "He is a good Vallalar devotee".Vallalar wishings to ArutparaganathanAvl.Vallalar wishings to other sanmarga brothers: Thiru.Subramaniyan,THIRU.Chandramohan,Thiru.HariGovindan,Thiru.Ratinasamy&Thiru.Thayumanavar

with vallalar loving,AruljothiSujatha.