திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர் பேட்டையில் சன்மார்க்க எழுச்சி.
பங்குனி மாத பூச நாள் நிகழ்ச்சி
நாள் 3.4.2009.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம். பொதட்டூர்ப் பேட்டை சிறப்புச் சிற்றாட்சி வள்ளலார் அன்னதான அறக்கட்டளையின் பங்குனி மாத பூசம் அன்னதானத்தைப் பற்றிய நிகழ்வு..
03.04.2009 பகல் 1.00 மணிக்கு Dr. எம். எஸ். லோகநாதன் அவர்களின் (வள்ளலார்) அன்னதான அறக்கட்டளை ஊக்குநர் (சன்மார்க்கி) தலைமையில், கருணையும், தயவும் கொண்ட சிவ தொண்டாற்றும் பெரியோர்களும். முதுமை அடைந்த தாய்மார்களும் மற்றும் குழந்தைகள், தாய்மார்கள், ஆகியோர்களின் உதவியுடன் சிறப்பாக 650 அடியார்களுக்கு பெருமானார் அருளிய மகா மந்திரம் ஓதப்பட்டது.
திரு அருட்பாவில் பல பாடல்கள் பாடப்பட்டன. அத்துடன் அங்கு ஏழை எளியோர்க்கு, அன்னதானம் நடைபெற்றது.
அன்றைய மாத பூசத்தின் அன்னதானம் வழங்கியவர் திரு த. அன்பழகன். திருமதி துர்கா அன்பழகன், VAO, அத்திமாஞ்சேரி, பள்ளிப்பட்டு வட்டம்,
கருணை உள்ளம் கொண்டவர்களும் பெருமானார் வழியில் தொண்டாற்றும் அன்புள்ளம் கொண்டவர்கள், சிவ தொண்டர்கள் மற்றும் நம் பெருமானார்க்கு சேவை செய்யும் பெரியோர்கள் .பெயர் விவரம் -
திரு ஏ.வி. சக்கரப்பன், அறங்காவலர்
திரு எம். ஆர். தங்கவேலு,
திரு எம். ஆர். சுப்பிரமணியம்.
திரு ஆர். ஜோதி.
திரு என். எஸ். சுடர்மணி
திரு எஸ். டி. கிருஷ்ணன் – பாடகர்
திரு எஸ். ஏ. சுப்பிரமணி
திரு டி. எஸ். சொக்கலிங்கம் – சொற்பொழிவாளர்
சன்மார்க்க தொண்டர்கள் – திருத்தணி.
திரு எம். சுப்பிரமணிம், உதயம் கிராபிகஸ்,. திருத்தணி
திரு இன்பநாதன்
பெருமானாரின் பிரியர்கள்:
திரு ஜி. கோபி. கிருஷ்ணன், வேலூர்
திரு கோபிநாத், வேலூர்.
திரு கே. அருண்குமார், R. I, காஞ்சீபுரம்
திருமதி கே. ஹேமாவதி அருண்குமார்.
பிரதி மாதம் அன்னதான சமையல் பணிகளை சிறப்பாக செய்வோர் விவரம்
திருமதி சுமதி,. திருமதி சாந்தி, திருமதி சரஸ்வதி, திருமதி, வசந்தா, திருமதி கவிதா திருமதி ஜெயா, திருமதி லட்சுமி, திருமதி, சர்மிளா, திருமதி கோகிலா மற்றும் செல்விகள், ரோஜா நந்தினி.
முதியோர்கள்: நாகரத்தினம்மாள், புவனேஸ்வரி, மங்கம்மாள் இவர்களுடன்,
சன்மார்க்க அன்பர்கள், திரு டி.எஸ்.வி.நடராஜன், திரு ஆர், ஏ. சண்முகம், திரு எஸ்.எஸ். இராமு, திரு எஸ்.எஸ். ஜோதிஸ்வரன். எஸ். சி. அண்ணாமலை, திரு ஜெயகுமார், கோதண்டராமன், திரு ராமன், திரு உதயன், திரு கே.எஸ். யுவராஜ், திரு எஸ்.பி. கண்ணியப்பன். திரு கே. கோகுல்ராஜ், மத்தூர்.
இந்த ஊரில் நடைபெறும் சன்மார்க்க நிகழ்ச்சிகளில், திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்டின் கீழ் தயார் செய்யப்படும் ஆடியோ சி.டி.கள், அனைத்து அன்பர்களுக்கும் மிகவும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றது. இதன் மூலம், சன்மார்க்கம் விரிவான முறையில் பரவுவதற்கு, V.A.O. திரு T.S. கண்ணப்பனும் அவரைச் சார்ந்த அன்பர்களும் மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றனர்.
வருவாய்த் துறையினைச் சேர்ந்த பள்ளிப்பட்டு தாசில்தார் அவர்க்ள் கடந்த மாதம் பூச செலவினை தாமே ஏற்றார். அதன் மூலம் அவருக்கு இருந்த நோய் வள்ளற் பெருமானின் கிருபையால் நீங்கியது.
அவரை அடுத்து, வருவாய் ஆய்வாளர்களும், அவரது குடும்பத்தினரும், மேலும், கிராம நிர்வாக அலுவலர்களும், அவர்களது குடும்பத்தினர்களும், சன்மார்க்க வழிபாட்டு முறையினைக் கடைப்பிடித்து ஒழுகி வருகின்றனர்.
பொதட்டூர் பேட்டை, ஒரு சன்மார்க்க எழுச்சி மிக்க இடமாக திகழ்ந்து வருகின்றது.
தகவல் தரும் அன்பர் – திரு T.S. கண்ணப்பன், V.A.O.
Write a comment