DAEIOU - தயவு
11.4.2009 மதுரை Dt.வாடிப்பட்டி Tk குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தில் கிராம அளவிலான பிரச்சாரக் கூட்டம்.

11.4.2009 சனிக்கிழமை – மதுரை மாவட்டம் - வாடிப்பட்டி தாலுகா – குட்லாடம்பட்டி சமத்துவபுரம்.
அருள் ட்ரஸ்ட் கூட்டம்.
மற்றும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்
கிராம அளவிலான வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்.
வரும் 11.4.2009 சனிக்கிழமை அன்று, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம்,. குட்லாடம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் கிராம அளவிலான,
பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னர்,
குட்லாடம்பட்டியில் அருள் ட்ரஸ்ட் நிறுவனம் இயங்கி வரும் இடத்தில் திரு அருட்பா ஓதுதல் பணிகள் அன்று காலையில் நடைபெற உள்ளன. மதுரை மற்றும் சுற்றுப் புறத்தில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள உள்ளனர்.
பின்னர் அருள் ட்ரஸ்ட் மற்றும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் ஆகியவை இணைந்து, குட்லாடம்பட்டி கிராமத்தில், அருவிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தில், கீழ்க்கண்ட விபரப்படி அங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் திரு அருட்பிரகாச வள்ளலார் போதித்துச் சென்ற நெறிகளை, அங்கு உள்ள பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.
வள்ளலார் தத்துவம் மற்றும் சுத்த சன்மார்க்க நெறி, ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் கொல்லாமை குறித்த விரிவான விளக்கங்கள் அங்கு வசிக்கும் குடியிருப்பு மக்களுக்கு விரித்துரைக்கப்படும்.
இதற்கான முன் முயற்சிகளை, மதுரை அருள் ட்ரஸ்ட் மற்றும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அத்துடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளலாம்.
திரு முரளீதரன் .. 98655 02500
திரு சொக்கலிங்கம் … 98941 14252
திரு ராமானுஜம் … 97898 72120
குட்லாடம்பட்டி கிராமம் செல்ல வேண்டுமெனில், மதுரையிலிருந்து வாடிப்பட்டி வந்து அங்கிருந்து இயங்கும் மினி பஸ்கள் மற்றும் அரசு பேருந்துகள் மூலம் மேற்படி கிராமத்தினை அடையலாம். குட்லாடம்பட்டி அருவிக்குச் செல்லும் வழியில் அருள் ட்ரஸ்ட் நிறுவன தங்குமிடமும், சமத்துவ புரமும் அமைந்துள்ளன.
ஏற்கனவே, இவ்விரு நிறுவனங்களும், கீழ்க்கண்ட கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளன.

1.
குட்லாடம்பட்டி கிராமத்தில் – வாடிப்பட்டி Tk.
28.2.2009
2.
தென்கரை – வீமலிங்கேஸ்வரர் ஆலயம்-உசிலம்பட்டி Tk.
7.3.2009
3.
விக்கிரமங்கலம் – உசிலம்பட்டி Tk.
7.3.2009
4.
இ. கோவில்பட்டி-உசிலம்பட்டி Tk.
8.3.2009
5.
சிந்தாமணி – மதுரை Tk.
15.3.2009
6.
செட்டியபட்டி – உசிலம்பட்டி Tk.
29.3.2009
7.
கேப்டன் லிங்கம் அறக்கட்டளை – டெய்லரிங் காலேஜ், திரு நகர், மதுரைT k.
14.3.2009

மதுரை மாவட்டத்தில் இவ் விதமான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளன. சுத்த சன்மார்க்கம் பயிலாதவர்களும் இதன் மூலம் தெளிவு பெற்று, இந் நெறி பின்பற்றுவதற்கு வாய்ப்பாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.
2 Comments
P Sujatha
KarunaiMughu brothers,
Wish u all the best to your jeevakaruniya programme.
Vallalar blessings. With vallalar loving,
AruljothiSujatha
Thursday, April 9, 2009 at 03:42 am by P Sujatha
Ramanujam jam
திடீரென ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து தமிழ் நாடு அரசு பொதுமக்களுக்குத் தெரிவித்த அறிவிப்பின் காரணமாகவும், தென் தமிழ் நாட்டின் பகுதிகளில் மழை பெய்து வரூவதாலும் அதிலும் குறிப்பாக, குட்லாடம்பட்டி கிராமத்திலேயே, 10.4.2009 முதலே மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், வரவிருந்த அன்பர்களின் நலன் கருதி, 11.4.2009 அன்று நடைபெறுவதாக இருந்த அருள் ட்ரஸ்ட் கூட்டம் மற்றும் வாடிப்பட்டி தாலுகா, குட்லாடம்பட்டி கிராமத்தில் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க விழிப்புணர்வுப் பிரச்சாரம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Saturday, April 11, 2009 at 09:44 am by Ramanujam jam