DAEIOU - தயவு
25.7.09, 26.7.09, 2-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடு.

2-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடு.
நாள் ஜூலை 25.7.2009 சனி மற்றும் 27.7.2009 ஞாயிறு (2 நாட்கள்)
இடம் – ஜெயம் திருமண மஹால், விழுப்புரம்
(கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடம் அருகில் – சென்னை நெடுஞ்சாலை)
உலகம் போற்றும் உத்தமர்
திருவருட்பிரகாச வள்ளலார் அழைக்கின்றார்…
அலைகடலென அணிதிரண்டு வாரீர்…வாரீர்…
மாநாட்டு அமைப்பாளர்
ஆன்மநேயன் – ஜெய அண்ணாமலை, Ex.M.C.,
தலைவர்,
விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடுக்குழு, 177, மெயின் ரோடு, விக்கிரவாண்டி. 505 652.
விழுப்புரம் வட்டம். தமிழ்நாடு.
தொடர்பு எண் - செல் 99946 56314, 9789548600, 96268 16828.
சன்மார்க்க எழுச்சி மாநாட்டின் நோக்கங்கள்.
அன்புடையீர், வந்தனம்.
சாதி, மதம், இனம், மொழி, தொழில், நிறம், ஆண், பெண் போன்ற வேறுபாடுகளைக் கடந்து ஆன்மநேய ஒருமைப்பாடு எனும் ஒரு குடைக்கீழ் மனித குலத்தைக் கொண்டுவர உலகிற்கே வழிகாட்டியவர் வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் ஆவார்கள்.
அனைத்து வேறுபாடுகளையும் கடந்து உலக உயிர்களின் வாழ்வை ஒருங்கே நோக்கிய அருளாளர் வள்ளல்பிரான் ஆவார். அவரால், நம் செந்தமிழ் நாட்டின் பெருமை, உலக அரங்கில் இன்று மேலோங்கி வருவது உண்மையே.
காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு வள்ளலார் வகுத்தி வாழ்வியல் கொள்கைகளை நாடறிய, உலகறிய செய்யவேண்டும் என்ற உயர்நோக்கோடு விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் மாநாட்டுக்குழு தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக விழுப்புரத்தில் 2 நாட்கள் எழுச்சி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது.
மாநாட்டு நிகழ்ச்சிகள்;
அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றுதல், அகவல் உணர்ந்தோதல், சன்மார்க்க கொடி ஏற்றுதல், சுத்த சன்மார்க்க மாநாடு துவக்க விழா, வள்ளலாரை பற்றிய நூல் வெளியீடு, சிறப்பு சொற்பொழிவு, பட்டிமன்றம், இசையரங்கம், ஆய்வரங்கம், தீர்மானம் மற்றும் அறிக்கை வாசித்தல், புத்தக கண்காட்சி, மூலிலை கண்காட்சி, யோகாசனம், தொடர் அன்னதான மழை மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவிகள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், ஆதரவற்ற ஏழைகளுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உள்ளன.
அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழும்
விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அன்பர்கள்.