DAEIOU - தயவு
1.5.2009 - 10.5.2009 மதுரை பெருங்குடியில் மாணவச் செல்வங்களுக்கு சுத்த சன்மார்க்கப் பயிற்சி வகுப்பு

மதுரை மாவட்டம் - பரம்புப்பட்டி-பெருங்குடி கிராமத்தில் மாணவ,

மாணவியருக்கான

வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம்.

இடம் - பெருங்குடி (Near Airport, Madurai)

நாள் - 1.5.2009 முதல் 10.5.2009

மதுரை மாவட்டத்தில் வள்ளல் பெருமான் வகுத்தளித்த சுத்த சன்மார்க்க நெறி கிராம அளவில் பரவி வருகின்றது. மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மற்றும் அருள் ட்ரஸ்ட் மற்றும் மதுரை சார்ந்த சன்மார்க்க அன்பர்கள் இதில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வரவிருக்கும் 2009 மே மாதத்தில் 1.5.2009 முதல் 10.5.2009 வரையிலான காலத்தில மாணவச் செல்வங்களை வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் கொண்டு வருவதற்கு வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம் பெருங்குடி (Near Airport, Madurai) விமான நிலையத்திற்கு சமீபத்தில் பரம்புப்பட்டியில், சன்மார்க்கப் பெரியவர் திரு பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் அமைந்திருக்கும் கீழ்க்கண்ட இடத்தில், நடத்தப்பட உள்ளது.


அனைத்துலக சர்வ சமய சன்மார்க்க அற நிலையம்,

248, கார்த்திகை தீபம் ரோடு,, சித்திவளாக நகர், பரம்புபட்டி

பெருங்குடி, மதுரை, 625 029.

மதுரையில் உள்ள முக்கியமான சன்மார்க்க சான்றோர்கள் இப் பயிற்சி வகுப்பில் மாணவ மாணவியருக்கு பாடம் நடத்துவதற்கு இசைந்துள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகளை, மதுரை சன்மார்க்கி, செல்வி லலிதா மணி, ஞான தீபம் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு அ. இராமானுஜம், வள்ளலார் கருணை சாலை சபை நிறுவனர்கள் திரு APJ அருள் மற்றும் அவரது துணைவியார் திருமதி ராமலக்ஷ்மி, வீமா பேட்ரி & ஸ்பேர்ஸ் நிறுவனர் திரு சொக்கலிங்கம், புவனேஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

11 வயது முதல் 16 வயது வரையிலும் உள்ள மாணவ மாணவியர் அனைவரும் இந்த சுத்த சன்மார்க்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வள்ளல் பெருமானின் கொள்கை கோட்பாடுகளைக் கற்று, தமது வாழ்விலும் சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிப்பதற்கு இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், இப் பயிற்சி வகுப்புக்களில் கலந்து பயன்பெற அழைக்கப் படுகின்றனர்.

பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்கும் இடம் அனைத்தும் இலவசம்.

பயிற்சியில் இடம் பெறும் நிகழ்ச்சிகள்

குழந்தைகளின் ஒழுக்கவியல், ஞாபகசக்தி திறன் மேம்படுத்தல், அறிவுத் திறன் மேம்பாடு, ஆரோக்கிய வாழ்வியல், உடற்பயிற்சி, மருத்துவம் மற்றும் நன்முயற்சி வாழ்க்கைப் பயிற்சிகள்.

அனுமதி பெறுவதற்கு கடைசி நாள் - 19.4.2009 ஞாயிற்றுக் கிழமை.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

அருள் அறக்கட்டளை

4, சாமி ஆசாரி சந்து, சின்னக்கடை வீதி, தெற்கு வாசல், மதுரை.1

தொடர்பு எண்கள்

98941 14252, 97913 09341, 94437 20649

முன் பதிவு செய்தவர்களே பயிற்சி முகாமில் அனுமதிக்கப்படுவர்..



1.5.2009 - 10.5.2009 மதுரை பெருங்குடியில் மாணவச் செல்வங்களுக்கு சுத்த சன்மார்க்கப் பயிற்சி வகுப்பு

1.5.2009 - 10.5.2009 மதுரை பெருங்குடியில் மாணவச் செல்வங்களுக்கு சுத்த சன்மார்க்கப் பயிற்சி வகுப்பு

3 Comments
P Sujatha
karunaiMughu Brothers&Sister Sri.Lalithamani Avl,
lalla Nadathuga brothers&Sister.Wish your Plans are Very Successful.Vallalar blessings.
with vallalar loving,
AruljothiSujatha.
Thursday, April 9, 2009 at 04:04 am by P Sujatha
P Sujatha
KaruniMughu Brothers&sisters,
Valalar Lives in all children.Vallalar is given in all morals to Children.Vallalar Likes Very much
to all children.Students should know about Suddhasanmargam.
11-16th ages are very situtable in Learn to Vallalar suddha sanmargam.Vallalar sanmargam is very easy to Understand in all people.Particularly Very easy understand in 11-16 Ages childern.
KarunaiMughu Brothers&Sisters,
Pls continue the SuddhasanmargaEducation in students. Bharathiyar ninivaka Ullagakum KalviSalaikal Amaipathu pola Valalar Ninivaka Ulllagamakum Suddhasanmargakalvisalaikal Amaipoam.
Keep it up all Sanmarga Brothers,Sisters's SanmargaServices.
"Vallalar is very good Guru in all students."
"I am a Sanmarga student.Vallalar is my Good Sanmarga Guru" With Vallalar Loving,
AruljothiSujatha
Wednesday, April 22, 2009 at 00:42 am by P Sujatha
P Sujatha
KarunaiMigu Brothers&Sisters,
I am very confident in Vallalar sanmargam.Vallalar is given more require informations in all students.
Vallalar is very good Guru to us.Vallalar sanmarga Education is very necessary to all the Students.Vallalar
moral Education institutions are must establishing&Developing the world.Anbu,Karunai,Deiou,Arul is very main &Importance objective of Sanmarga Education.Good Education Create Karunai.Vallalar sanmarga education is a
KarunaiLIfe Education.(Karunai=Good Mind+Good Knowledge)
With Vallalar Loving,
AruljothiSujatha
Thursday, April 30, 2009 at 02:59 am by P Sujatha