DAEIOU - தயவு
உண்மை விழிகள் - இன்றைய சாதனையாளர்.

ண்மை விழிகள் இன்றைய சாதனையாளர்.
கடந்த 8.2.2009 அன்று, வடலூரில் தைப் பூச விழா நடைபெற்றபோது, இராமநாதபுரம் சன்மார்க்க சங்கத்திற்கு, சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற அன்பர் திரு கண்ணப்பன் அவர்கள் வந்திருந்தார். அவருக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குருராஜ பேட்டை என்றார்.
தற்போது சென்னையில் Switzer Instrument Limited, Ambattur, Chennai-யில் பணிபுரிந்து வருகின்றார்.
அவரிடம் விவரம் கேட்டபோது, மற்ற அன்பர்களுடன், தாம், பூச நாட்களில் வடலூருக்கு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவரது மனைவியார் திருமதி உமா என்பவரும் பார்வையற்றவர். விக்னேஷ்வரன் என்ற ஒரு மகன் அவருக்கு உண்டு என்றார்.
பூந்த மல்லி பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற தம்மை, முதலில் கிறித்துவ மதம் மிகவும் ஈர்த்ததென்றார். அம் மதத்தில் முதலில் தாம் சார்ந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் ஒரு கால கட்டத்தில், அதிலிருந்து விடுபட்டு, வள்ளற் பெருமானாரால் ஆட்கொள்ளப்பட்டு, திரு அருட்பாக்களை பிறர் மூலம் பாடக் கேட்டு, அதில் மிகுந்த லயிப்பு வந்ததாகத் தெரிவித்தார். உண்மைக் கடவுளின் தத்துவங்களையும் அதன் மூலம் தாம் தெரிந்துகொண்டதாகக் கூறினார்.
திரு அருட்பா ஆடியோ சி.டி. வெளியாகும்போதெல்லாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் நிறுவனர் (லேட்) ஜோதி முருகன் ஐயா அவர்களைத் தொடர்பு கொண்டு தாம் முதலில், ஆடியோ சி.டி.களைப் பெற்று வந்ததாகத் தெரிவித்தார்.
தாமும் கேட்டு மற்றவர்களுக்கும் அந்த ஆடியோ சி.டி.களைக் கொடுத்து மகிழ்வதாகவும், அந்த ஆடியோ சி.டி.களின் தரம் மிகவும் நன்றாக உள்ளதாகவும், ரிக்கார்டிங் மிகவும் துல்லியமாகவும் இருப்பதாகவும், தம்மைப் போன்ற பார்வைக் குறை உள்ளோருக்கு, திரு அருட்பாவினை செவி வழியாக தேனாக ஊற்றும் பணியை செய்து வரும் திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் நிறுவனத்திற்குத் தமது நன்றியினையும் அவர் தெரிவித்தார்.
அவர் திரு அருட்பா ஆடியோ சி.டி.யில் மிக்க ஆர்வம் காட்டுவதைக் கண்ட, திருவருட்பா தெய்வ இசை அமுதம் ஆடியோ ப்ரொஜெக்ட் நடத்தும் சிங்கப்பூரில் வாழும் அன்பர் திரு சிவக்குமார் அவர்கள், ஒவ்வொரு ஆடியோ சி.டி.யிலும் அவரிடம் 10 என்ற எண்ணிக்கையில் திரு அருட்பா ஆடியோ சி.டி.களைக் கொடுத்து விற்பனை செய்யச் சொல்லலாம் அதன் மூலம் விற்று வரும் மார்ஜினை அவர் உழைப்பு ஊதியமாக எடுத்துக் கொள்ளட்டுமே என்று கருத்துத் தெரிவித்தார்.
அவரது எண்ணத்தின்படி, அன்பர் திரு.கண்ணப்பனைத் தொடர்பு கொண்டபோது, தாம் ஒரு சில அன்பர்களையும் தொடர்பு கொண்டு, ஒரு சில சன்மார்க்க சங்கங்களையும் தொடர்பு கொண்டு பின்னர் தெரிவிப்பதாகக் கூறினார்.
2009 மார்ச் முதல் வாரத்தில் ஒரு நாள் அவர், ஒவ்வொரு ஆடியோ சி.டி.யிலும் 10 எண்ணிக்கையில் அனுப்பி வையுங்கள் என்றார். எனவே இதுவரை வெளியிடப்பட்ட ஆடியோ சி.டி.களில், ஒவ்வொன்றிலும் 10 என்ற எண்ணிக்கையில், 110 (நூற்றுப் பத்து) ஆடியோ சி.டி.கள் உடனடியாக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பத்தே தினங்களில் அவை அனைத்தையும் அவர் விற்று, அதற்கான தொகையினை, வள்ளலார் தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் நிறுவனத்திற்குக் கட்டி சாதனை படைத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், எப்போதெல்லாம் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் வெளியிடப்பட்டாலும், தமக்கு அவற்றை அனுப்பி வைக்கும்படியும் அவர் கோரிக்கையும் வைத்தார். இவரையா பார்வையற்றவர் என்பது ..
அக விழியால் அனக வாழ்க்கை வாழ்வு நடத்தும் இந்த அன்பர், திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ஆடியோ நிறுவனத்தின் பணிகளை வெகு இலகுவாக செய்து சாதித்துள்ளாரே ?
இவருக்கு சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் சன்மார்க்க ஆஸ்கார் விருது தரலாமே.
அவரது செல் நம்பர் . 98401 02544