DAEIOU - தயவு
14.3.2009-மதுரை திருநகர் கேப்டன் லிங்கம் ட்ரஸ்டில் வள்ளலார் கொள்கை நெறிபரப்பல்.

14.3.2009 சனிக்கிழமை - கேப்டன் லிங்கம் ட்ரஸ்ட், திருநகர், மதுரை.6
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை
மற்றும் அருள் ட்ரஸ்ட், மதுரை.
மாணவ மாணவியரிடையேசிமுகாம் மற்றும்
முதியோர் ஆதரவு இல்லத்தில்
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள் பரப்புதல்.
14.3.2009 அன்று காலை 11.00 மணி அளவில், கீழ்க்காணும் அன்பர்கள், வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை நெறிகளைப் பரப்புவதற்காக, மதுரை திருநகரில் இயங்கி வரும் கேப்டன் லிங்கம் ட்ரஸ்ட் மற்றும் சுமதி தையல் பள்ளி சென்றனர்.
  1. மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன். நாராயணபுரம், மதுரை.14
  2. அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன், மதுரை.
  3. செல்வி லலிதாமணி, சன்மார்க்க அன்பர், ரயில்வே காலனி, மதுரை.
  4. திரு பாலமுருகன், சன்மார்க்க அன்பர், திருநகர், மதுரை.
  5. திரு சொக்கலிங்கம், சன்மார்க்க அன்பர், தெற்குவாசல், மதுரை.
ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி, மேற்படி நிறுவனத்தின் இயக்குநர் அவர்கள், அங்கு பயிலும் மாணவர்கள், மாணவியர்கள் ஆகியோர்களை, இச் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்ட அரங்கினில் ஒருங்கிணைத்து வைத்திருந்தார்.
அதேபோல், அங்கு வசிக்கும் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த ஆதரவற்றவர்களும், அந்தக் கூட்ட அரங்கினில் வருகை புரிந்திருந்தனர்.

வ.எண்.
பெயர்
வயது
ஊர்
1.
எஸ். கனகவல்லி
69
உசிலம்பட்டி
2.
எஸ். கமலா தேவி
55
மதுரை
3.
என். நாகரத்தினம்
59
கல்லுப்பட்டி
4.
ஏ.சுப்பையா
77
மதுரை
5.
பி.அம்சவேணி அம்மாள்
87
பழனி
6.
கே.ஜி.கே.ராமகிருஷ்ணன்
82
மதுரை
7.
சோமலிங்க எஸ். சங்கர்
82
மதுரை
8.
ஆர். முத்துலக்ஷ்மி
80
மதுரை
9.
ஜி.ஆர். லதா மகேஸ்வரொ
57
மதுரை
10.
ஆர். மருதாயி அம்மாள்
76
மதுரை
11.
என். மீனாக்ஷி அம்மள்
70
மதுரை
12.
கே. ராஜம்மாள்
85
மதுரை
13.
கே. லக்ஷ்மி அம்மாள்
90
மதுரை
14.
ஏ. கமலா அம்மாள்
68
மதுரை
15.
ஆர். கோவிந்தம்மாள்
70
மதுரை
16.
ஆர். எம். தெய்வானை
60
மதுரை
17.
எம். பி. ராமகிருஷ்ணன்
82
மதுரை
18.
பி. என். சிவப்ரகாஷ்
55
மதுரை
19.
பி. செல்லையா
81
மும்பை
20.
ரெங்கசாமி நாடார்
85
மதுரை
21.
எம். துரைக்கண்ணு
65
மதுரை
22.
சாந்த சீலன்
61
கொடைக்கானல்
23.
கே. செளந்தரபாண்டியன்
80
மதுரை

பயிலும் மாணவ மாணவியர்

1.
ஆர். ராஜேஸ்வரி
நர்சிங்
2.
ஏ. சிலம்புச் செல்வி
நர்சிங்
3.
ஜி. முத்து லக்ஷ்மி
நர்சிங்
4.
எஸ். விஜயலக்ஷ்மி
நர்சிங்
5.
பி. பார்வதி
நர்சிங்
6.
ஏ. சங்கீதா
நர்சிங்
7.
மாரிமுத்து
கேட்டரிங்
8.
கருப்பசாமி
கேட்டரிங்
9.
எஸ். மணிகண்டன்
கேட்டரிங்
10.
வெற்றிவேல்
கேட்டரிங்
11.
இளைய ராஜா
கேட்டரிங்
12.
அரசன்
கேட்டரிங்
13.
ஸ்ரீஜா
கேட்டரிங்
14.
ஆர். ஜோதி
கட்டிங்
15.
எஸ். லக்ஷ்மி
கட்டிங்
16.
ஏ. முத்துலக்ஷ்மி
கட்டிங்
17.
ஜி. லக்ஷ்மி
கட்டிங்
18.
ஜே. சுகன்யா
கட்டிங்
19.
ஆர். தேவி
கட்டிங்
20.
ஆர். சந்திர லேகா
கட்டிங்
21.
ஆர். சந்திரகலா
கட்டிங்
22.
வி. ஜெனிபர்
கட்டிங்
23.
ஆர். விஜய்
எம்பிராய்டரி
24.
ஜே. பிரகாஷ்
எம்பிராய்டரி
25.
எம். ராம்குமார்
எம்பிராய்டரி
26.
வி. அக்னிராஜ்
எம்பிராய்டரி
27.
ஏ. மதன்
எம்பிராய்டரி
28.
சி. அர்ச்சனா
எம்பிராய்டரி
29.
பாலமுருகன்
எம்பிராய்டரி.

இந் நிறுவனத்தில் பணி புரியும் ஆசிரியைகள்.

1 .
சுமதி
கட்டிங் & எம்பிராய்டரி
2.
வள்ளி
நர்சிங்
3.
தேவி
பியூட்டிஷியன்
4.
குருபரன்
கேட்டரிங்

இந் நிறுவனத்தை நடத்தும் திரு ரமேஷ் மற்றும் அவரது துணைவியார் திருமதி சுமதி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திரு ஏ.ராமானுஜம், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன். நாராயணபுரம், மதுரை.கூறியதாவது.
இந் நிறுவனத்தில் மாணவ மாணவியர்களும், தங்கி பயின்று வருவதுடன், முதியோர்களும் வசித்து வருவதால். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியினை அனைவரும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் விதத்தில், இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது.
இந்த உலகம் எப்படி உருவானது என்பதை ஆன்ம ஞானிகள் கூற்றின்படி முதலில், பேரொளியிலிருந்து, ஐம்பூதங்களும் உருவாகி, அதிலிருந்து, சூரியன் முதலான கோள்கள் உருவாகி, அதிலிருந்து அக்கினியாக பிரிந்து இந்த நில உலகம் பின்னர், குளிர்ந்து எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு வசதியாக உருவாகியுள்ளது. இந்த மா பிரபஞ்சந்தோறும் அணுக்கள் உள்ளன. அவ் வணுக்கள் தோறும் இறைவனின் பேராற்றல் நிறைந்துள்ளது.
வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி வடிவாகக் கண்டார். சிர நடுச் சிற்றம்பலத்திலே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நாம் வணங்கவேண்டும் என்றார். சிறு தெய்வ வழிபாடு கூடாது எனச் சொன்னார்.
முதலில் ஜட பூதப் பொருள்களாக இருந்து, பின்னர், இறைவனின் பேரருளால், ஓரறிவுத் தாவரமாக ஒரு ஆன்மா பிறப்பிக்கப்படுகின்றது. பின்னர், அதன் அறிவு வளர்ச்சி அடைந்து, தாவர நிலை கடந்து ஊர்வன, பறப்பன, கடல் வாழ் ஜந்துக்கள், நடப்பன, என தாவர வர்க்கத்திலிருந்து மிருகங்கள் வரை ஐந்தறிவு விருத்தி செய்யப்படுகின்றது. அதன் பின்னர், இறைவனின் பேரருட் பெருங்கருணையால், ஐந்தாவது அறிவு வரை விருத்தி பெற்ற பின்னர், ஆறாவது அறிவுள்ள மனித உடல் வழங்கப்படுகின்றது. ஆறாவது அறிவு படைத்த மனிதனுக்கு சிறப்புப் புலனாக மனம் படைக்கப்படுகின்றது. அதைக் கொண்டு, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வாழ்வில் கடைப்பிடித்து, அருள் வல்லபத்தினை முதலில் பெற்றும், பின் அருள் பூரணத்தைப் பெற வேண்டும். மனித குலம், இறைவனை அறியும் பக்குவத்தை அடைய வேண்டும். தயவு மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பதன் மூலம் மனித குலம் இறவாப் பெரு நிலையை அடையலாம்.
இதற்கு முன்னர் வந்த ஞானிகள் எல்லோரும் முக்தி அடைந்தனர். ஆனால், வள்ளற் பெருமான் அதனைக் கடந்து, தான் கருணை வடிவமாகவே மாறி. இந்த மனித குலத்துக்குப் பெருந்தொண்டாற்றி, தமது உருவத்தையே, இறை வடிவமாக மாற்றிக் கொண்டார். சித்தி நிலை அடைந்தார். அந்த நிலையினை அடைவதற்காக, அனைவரும் இந் நாளிலிருந்தே முயல வேண்டும்.
திரு முரளீதரன், அருள் ட்ரஸ்ட் நிறுவனர். மதுரை.கூறியதாவது.
நம் தமிழ் மொழியில், திருக்குறளுக்கு இணையானது ஒன்றில்லை. திரு வள்ளுவப் பெருந்தகை, திருக்குறளில், ஆண்டவரை வழிபடுவது குறித்தும், கொல்லாமை ஒவ்வொருவரும் வாழ்வில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் சொல்லியுள்ளார்.
இறைவன், அருட்பெருஞ்ஜோதியாக உள்ளார். எல்லாக் கோயில்களும், மனித வடிவத்தை ஆதாரமாக வைத்தே நிர்மாணிக்கப் பட்டுள்ளன. அதனினும் ஞானம் விளங்கும் இடமாக, வள்ளற் பெருமான், கழுத்துக்கு மேலே தலை நடுவில் இறைவன் விளங்கும் இடமாகக் குறிப்பிட்டுள்ளார். அதனை அனைவரும் அறிவதற்காகவே சத்திய ஞான சபையைக் கட்டுவித்தார். முதலில் ஏழைகள் பசியாறுவதற்கு வசதியாக, தர்மச்சாலையைக் கட்டுவித்தார். பின்னர், வடலூரில், சத்திய ஞான சபையைக் கட்டுவித்தார். எல்லோரும், அவர் சொன்ன ஒழுக்க விதி முறைகளை தமது வாழ்வில் கடைப்பிடித்தால், இறைவனை அடைவது எளியது என்றார். அதிகாலை நேரத்தில் இவ் வுலகத்தைச் சுற்றி 3.30 மணியிலிருந்து காலை 6.00 மணி வரை அமுதக் காற்று சுற்றி வருகின்றது. அவ் வேளையில், இறைவனைப் பற்றி சிந்தித்து, இறை அருளைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றார். கொல்லாமை விரதத்தை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கினார்.
செல்வி லலிதா மணி, ரயில்வே காலனி, மதுரை.கூறியதாவது.
மனிதனுக்கு பசி வந்தால், பத்தும் பறந்து போய்விடும். புலன் மயக்குறும். எனவே, வள்ளற் பெருமான், ஏழைகளின் பசியாகிய தீயை அணைப்பதன் மூலம், ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில், ஜீவகாருண்ய நெறியில் செல்லலாம் என்றார். மற்ற மற்ற ஞானிகள் சொன்னதிலிருந்து, வித்தியாசமாக, தாமே, அதற்கு சான்றாக வள்ளலார் வாழ்ந்து காட்டினார். நாம் அனைவரும், நாகரீகத்தை வாழ்வில் உடனே கடைப்பிடிக்கின்றோம். ஆனால், ஆன்ம ஞானிகள் சொன்ன ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுவதில், மிகவும் பிந்தங்கியே உள்ளோம். நாகரீகம் முன்னேற்றம் கண்டது போல, ஆன்மீக வளர்ச்சி அடைய வேண்டியதற்கான முயற்சியினை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். எனவே, கொலை, புலை தவிர்த்து வாழ்தலே உண்மை வாழ்வு எனவும். அதனை இந்த நிறுவனத்தில் பயின்று வரும் அனைவரும், தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
திரு பாலமுருகன், திருநகர், மதுரை.கூறியதாவது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆசிரியராக பணி புரிந்தேன். வள்ளல் பெருமானின் நெறிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எனவே, ஆசிரியப் பணியினன விட்டு விட்டு, வள்ளலாரின் நெறிகளை நான் பின்பற்றி நடக்கின்றேன். எனது வாழ்வில் தற்போது, பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளேன். உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் இந்த மாற்றத்தினை நான் உணர்கின்றேன். நமக்குள்ளே நாம் நமது குடும்பம் என்ற சுருக்கமான வட்டத்திற்குள்ளேயே நெடுங்காலமாக இருந்து வருகின்றோம். அதனை விடுத்து, நம்மால், இந்த சமுதாயத்திற்கு என்ன உதவி செய்தோம் என்பதை சிந்திக்க வேண்டும். நம்மைக் காட்டிலும், வாழ்க்கை வசதிகளில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு, நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். அவ்விதம் செய்யச் செய்ய, இறைவனின் பெருங்கருணை நமக்குக் கிடைக்கும். அனைவரும் கொல்லா நெறியைத் தமது வாழ்வில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களில் பெரும்பாலோரும், மாணவ, மாணவியர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இறுதியில் இந் நிறுவனர் பேசுகையில், தமது தகப்பனார் காலத்திலேயே வள்ளலாரின் நெறிகளில் ஈடுபாடு ஏற்பட்டு, அதன் பின்னர், தமது சொந்த ஊரான. முதுகுளத்தூரில், வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சங்கம் கட்டுவதற்கென்றே ஒரு இடம் ஒதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
நேரில் வந்து, இந் நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியின் மேன்மையையும், கொல்லா நெறி வாழ்வில் ஏன் தவறாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வினை இங்கு வசிக்கும் முதியோர், ஆகியோருக்கும் எடுத்து இயம்பியதற்கு, அனைவருக்கும் கேப்டன் லிங்கம் ட்ரஸ்ட் மற்றும் சுமதி தையல் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாகி நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கியதுடன். கூட்டம் இனிதே முடிவடைந்தது.